வருமானத்துடன் வரி சேமிப்பையும் கொடுக்கும் சிறந்த முதலீடுகள்

உங்கள் வருமானம், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பை அளவை தாண்டும் போது, அந்த வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. வருமான வரியில் இருந்து விலக்கு பெற சந்தையில் பல வகையான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன, அதில் முதலீடு செய்தால் நீங்கள் வரிச்சலுகை பெறுவதோடு சிறந்த வருவாயையும் பெறலாம். நீங்கள் வரியைச் சேமிக்க விரும்பினால், உங்கள் பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும்.

1 /5

திட்டத்திலும் வரியை மிச்சப்படுத்தலாம்.  உங்கள் குழந்தையின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சிறு வயதிலேயே முதலீட்டை தொடங்குவது விவேகமானது. உங்கள் குழந்தை பிறந்த 60 முதல் 90 நாட்களுக்குள்ளேயே முதலீட்டை தொடங்குவதற்கான பல திட்டங்கள் உள்ளன.  அதில் உங்களுக்கு ஏற்ற திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இதனால், நீங்கள் வருங்கலாத்தில் மிகப் பெரிய தொகையை பெற முடியும். ஒரு விவேகமான முதலீட்டாளராக, நீங்கள் ஒரு யூனிட் லிங்க்ட் சைல்ட் ப்ளான்  திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இதன் கீழ், ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ .1,50,000 வரை வரி விலக்கு கோரலாம்.

2 /5

பென்ஷன் ப்ளான் அல்லது ஓய்வூதியத் திட்டம் வரி சேமிப்புறககான் மற்றொரு சிறந்த திட்டம். இதில் உங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டெபாசிட் செய்யலாம். பின்னர் ஓய்வு பெற்ற பிறகு மாதம் தோறும் பென்ஷனைப் போல் வருமானம் கிடைக்கும்.  ஓய்வூதிய திட்டத்தில் தொடர்ச்சியாக முதலீடு செய்தால், மூலதனத்தில்  சேமிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். இறுதியில் நீங்கள் ஒரு பெரிய தொகையைப் பெறுவீர்கள். ஓய்வூதியத் திட்டங்களுக்கு வருமானச் சட்டம் 1961 இன் பிரிவு 80 சி.சி.சி இன் கீழ் வரி விலக்கு பெறலாம். இந்த பிரிவின் கீழ், ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ. 150000 வரை வரி விலக்கு கிடைக்கிறது.  

3 /5

ULIP திட்டத்தில் முதலீடு செய்வது பிரிவு 80 சி மற்றும் வருமான வரியின் 10 (10 டி) இன் கீழ் வரிச்சலுகை பெறலாம். ஒரு ULIP  திட்டம் 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திற்கானதா இருக்கலாம், ஆனால் அதன் தொடக்கத்தில் 5 ஆண்டுகள் லாக் இன்  காலம் உள்ளது. பிரிவு 80 சி இன் கீழ், ULIP-ல்  செய்யப்படும் முதலீடுகள் வரிவிலக்கு பெறலாம். அதிகபட்ச வரம்பு ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம். இந்தக் பாலிஸியிலிருந்து வெளியேறும் நேரத்தில் (5 வருட காலத்திற்கு பிறகு) அல்லது முதிர்ச்சி காலத்தில், அதன் நிதி மதிப்பிற்கும் வரி விலக்கு உண்டு. 

4 /5

இன்றைய நிலையில், மருத்துவ காப்பீடு என்பது, அனைவரும் தேவையான ஒரு காப்பீடு இது வரியை சேமிப்பதற்கான ஒரு சிறந்த வழியும் கூட.  1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம்  பிரிவு 80D -யின் கீழ், சுகாதார காப்பீட்டிற்காக செலுத்தப்படும் பிரீமியங்கள் வரிச்சலுகைக்கு தகுதியானவை. 

5 /5

ஆயுள் காப்பீட்டில் செலுத்தப்படும் பிரீமியங்கள், 1961ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம்,  இன் பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை. இந்த பிரிவின் கீழ் அதிகபட்ச விலக்கு வரம்பு 1.5 லட்சம் ரூபாய். இதில், உங்களுக்காக வாங்கிய பாலிசியைத் தவிர, பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைக் கொள்கைக்கு செலுத்தப்படும் பிரீமியத்திற்கும் வரிச்சலுகையைப் பெறலாம்.