படத்தில் நடித்தாலும் நிஜத்தில் அந்த பழக்கமில்லை - ஹன்சிகா ஓபன் டாக்

படத்தில் மதுப்பழக்கம் கொண்ட காட்சிகளில் நடித்தாலும் நிஜத்தில் குடிப்பழக்கம் எனக்கில்லை என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

 

1 /6

ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்து அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கியிருக்கும் படம் பாட்னர்.   

2 /6

இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரியபிரகாஷ் தயாரித்திருக்கிறார்.  

3 /6

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இம்மாதம் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு குறிப்பிட்ட நிலையில் விரைவில் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   

4 /6

 இப்படம் குறித்து ஹன்சிகா பேசுகையில், "திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்துள்ளேன். சினிமாவை தாண்டி 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதால் அவர்களுக்கான கல்வி விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.   

5 /6

இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் மது சம்பந்தமான காட்சிகள் ஹிட்டாகி ட்ரெண்டானது. அது போன்ற காட்சிகள் இப்படத்திலும் இருக்கிறது. ஆனால், உண்மையில் எனக்கு குடிப்பழக்கமே கிடையாது.   

6 /6

ஒரு ஆண் பெண் உருவத்திற்கு மாறினால் எப்படி இருக்கும் என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்தது சவாலாக இருந்தது. கதாபாத்திரம் பிடித்துவிட்டதால் நடித்தேன். ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக பிடிக்கும்" என்றார்.