இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. துரித உணவுகளை விரும்பும் மனிதர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பலருக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்று எண்ணம் அதிகரித்துள்ளது.
உணவிற்கும் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது. அதிலும் காலையில் நாம் சாப்பிடும் உணவு, அன்றைய நாளில் நமது ஆற்றல் அளவை தீர்மானிக்கிறது என்பதால், எடுத்து உண்பது பலன் தரும்.
பொதுவாக உலர் பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட, உறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஊற வைப்பதால் அவற்றின் செரிமானம் எழுதாவதோடு, அதன் ஊட்டச்சத்து பலன்களை முழுமையாக அடையலாம். அந்த வகையில் ஊற வைத்து உலர் திராட்சைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
எலும்பு ஆரோக்கியம்: உலர் திராட்சையில் கால்சியம் சத்து மிக அதிகம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவும். வெறும் வயிற்றில் உலர் திராட்சையை சாப்பிடுவதால், மூட்டு வலி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ஆற்றலை கொடுக்கும் உலர் திராட்சை: நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் இருக்க, வெறும் வயிற்றில் உலர் திராட்சைகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில், பலவீனத்தை போக்கி எனர்ஜியை கொடுத்தும் திறன் உலர் திராட்சையில் உள்ளது.
இதய ஆரோக்கியம்: நார்ச்சத்துக்கள் நிறைந்த உலர் திராட்சை, கொலஸ்ட்ராலை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லது. இதனால் மாரடைப்பு இதய நோய்கள் போன்ற நோய்கள் அண்டாமல் இருக்கும்.
குடல் ஆரோக்கியம்: காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால், செரிமானம் சிறப்பாக இருக்கும். இதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
பலவீனத்தைப் போக்கும் உலர் திராட்சை: இரும்பு சத்து நிறைந்த உலர் திராட்சை, உடல் பலவீனத்தை போக்கி, ஆரோக்கியத்தை வலுவாக்கும். மிகவும் ஒல்லியான உடல்வாகக் கொண்டவர்கள் இதனை சாப்பிடுவதால், உடல் எடை அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரை அளவு: வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால், நீரழிவு நோயாளிகளும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக இருக்கலாம். இதன் ஆக்சனேற்ற பண்புகள், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.