வலுவான மனம் படைத்த பெண்ணாக மாறுவது எப்படி? இதோ 7 டிப்ஸ்!

How To Become Independent Woman : ஒரு சில பெண்கள், எப்படி வலுவான சுதந்திர பெண்ணாக மாற வேண்டும் என்று தெரியாமல் இருப்பர். அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

How To Become Independent Woman : மனிதராக பிறந்த அனைவருக்குமே சுதந்திரம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, பெண்கள் பலர் வெளியில் செல்வதற்கு, ஒருவரிடம் பேசுவதற்கு கூட அவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் உத்தரவு கேட்க வேண்டியதாக இருக்கிறது. அப்படியில்லாமல், சுதந்திரமாக தனித்து இயங்க, ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ சில டிப்ஸ்!

1 /8

பாதுகாப்பு அரண்: பிறர் தன்னை பயன்படுத்தும் நோக்கில் வருபவர்களை அருகே சேர்க்காமல் இருக்க வேண்டும். உடல் குறித்து, உருவம் குறித்து, நாம் இருக்கும் விதம் குறித்து யாரேனும் ஜோக் அடித்தால் அதை பொறுத்துக்கொண்டு நாமும் சிரிக்க கூடாது. ஒருவர் உங்களிடம் நடந்து கொள்ளும் விதம் பிடிக்கவில்லை என்றால் அதை அவர்கள் முகத்திற்கு நேராக கூறிவிட வேண்டும். இது, ஒரு நல்ல பாதுகாப்பு அரணாக அமையும். 

2 /8

பிறருக்காக குரல் கொடுத்தல்: நமக்கு பிரச்சனை ஏற்படும் போது மட்டுமன்றி, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்சனை ஏற்படும் போதும் குரல் கொடுக்க வேண்டும். 

3 /8

உங்களை நீங்களே உயர்வாக கருதுவது: உங்களை பற்றி நீங்களே உயர்வாக கருதினால்தான், பிறரும் உங்களை உயர்வாக கருதுவர். நம்மை எந்த அளவிற்கு தாழ்வாக நினைத்து கொள்கிறோமோ, நமது எனர்ஜியும் அந்த அளவிற்கு தாழ்வாக இருக்கும். 

4 /8

உங்களை யாரேனும் இழிவாக பேசினால், யாரும் உங்களுக்காக பேச வரமாட்டார்கள். உங்களுக்காக நீங்கள்தான் பேச வேண்டும். 

5 /8

பாசிடிவ் எண்ணங்கள்: பாசிடிவான எண்ணங்களை நீங்கள் உங்களுக்குள் விதைக்க வேண்டும். உங்களுடன் நீங்கள் பேசும் விஷயங்களும் பாசிடிவானதாக இருக்க வேண்டும். 

6 /8

உணர்ச்சி அறிவு: உங்கள் உணர்ச்சிகள் குறித்த விழிப்புணர்வும் அறிவும் உங்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான், நம்மை யாரும் ஏமாற்றாமல் இருக்க முடியும். 

7 /8

நம் வாழ்வில், நம்முடன் கடைசி வரை வரும் ஒரே உறவு நாம் மட்டும்தான் என்பதை நாம் நன்றாக உணர்ந்துக்கொள்ள வேண்டும். இவர் இல்லையென்றால் என்னால் வாழ முடியாது, அவர் இல்லையென்றால் என்னால் வாழ முடியாது என்ற நிலையில் இல்லாமல்,  “எனக்கு நான் இருக்கேன்..” என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும். 

8 /8

உங்களை உங்களுக்கே அதிகம் பிடிக்க வேண்டும். பிறர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதலையும் உங்களுக்கு நீங்கள் அதிகமாக வைக்க வேண்டும்.