ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!

Hemoglobin Rich Foods : பலருக்கு உடலில் ரத்த அணுக்களை அதிகப்படுத்த சில உணவுகளை சாப்பிடலாம். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?

Hemoglobin Rich Foods : உடலில் ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவது, தலைவலி மற்றும் உடல் வலி வருவதற்கு கூட குறைவான ரத்த அணுக்கள் காரணமாக அமையலாம். இது, பல்வேறு பெரிய பாதிப்புகளுக்கு உடலை அழைத்து செல்வது மட்டுமன்றி, நாள்பட்ட நோய் பாதிப்புகளுக்கும் காரணமாக அமையலாம். இதை தடுத்து, உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்க ஒரு சில உணவுகளை நாம் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? 

1 /7

Legumes: உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்க, வேர்கடலை, பீன்ஸ் போன்ற பருப்பு வகை உணவுகளை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

2 /7

பீட்ருட்: உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்க பீட்ரூட்டை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இரும்பு சத்துகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை பொறியல் செய்தும் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம்.

3 /7

பேரிச்சம்பழம்: சுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழங்களுள் ஒன்று, பேரிச்சம்பழம். இது, நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கிறது. 

4 /7

மாதுளம்பழம்: கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்று, மாதுளை. இந்த பழத்தில் உடலின் ரத்த அணுக்களை அதிகரிக்கும் சத்துகள் உள்ளது. 

5 /7

ஃபோலிக் ஆசிட்: ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளில், உடலின் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்கும் சத்து இருக்கிறது. வாழைப்பழம், ப்ராக்கலி, முளைக்கட்டிய பயிர் வகைகளை இதற்கு சாப்பிடலாம்.

6 /7

இரும்பு சத்து நிறைந்த உணவுகள்: இரும்பு சத்து நிறைந்த உணவுகளையும் உங்கள் உணவு டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை, கீரை, டோஃபு, ட்ரை ஃப்ரூட்ஸ் உள்ளிட்ட உணவுகளில் உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்கும் சத்துகள் உள்ளன.

7 /7

வைட்டமின் சி உணவுகள்: வைட்டமின் சி உணவுகளும் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். தக்காளி, பெர்ரி பழங்கள், கிரேப் பழங்கள், குடை மிளகாய் உள்ளிட்ட உணவுகளில் வைட்டமின் சி சத்துகள் உள்ளன. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகரிக்கும்.