பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 5 மல்டி டாஸ்கிங் Android ஸ்மார்ட்போன்!

வீட்டிலிருந்து பெரும்பாலோனோர் வேலை செய்து வருவதாலும் ஆன்லைன் கிளாஸ் நடந்து வருவதாலும் சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. 

  • Dec 19, 2020, 15:06 PM IST

ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யக்கூடிய ஒரு மல்டிடாஸ்கிங் போனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அதுவும் ரூ.20000 விலைக்குள் ஒரு ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அதற்கான டாப் 5 சிறந்த போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ALSO READ | இதை செய்தால் LPG சிலிண்டர் ஏஜென்சி மாதம் மாதம் உங்களுக்கு பணம் வழங்கும்..!

1 /5

இதன் விலை 16,999 ரூபாய் முதல் தொடங்குகிறது. இது மிகச் சிறந்த மல்டி-டாஸ்கிங் தொலைபேசிகளில் ஒன்றாகும், இது 6.6 அங்குல FHD+ ரெசல்யூஷனுடன் DoT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆன்லைன் தேவைகளுக்கு இது  சிறந்ததாக இருக்கும். 64 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளது. முன்புறத்தில், நீங்கள் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 5020 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

2 /5

இதன் விலை 14,999 ரூபாய் முதல் தொடங்குகிறது வியக்கத்தக்க நல்ல மீடியா டெக் ஹீலியோ G95 கேமிங் செயலி மற்றும் ஒட்டுமொத்த தொகுப்புடன் 6.5 இன்ச் Full HD+ திரை 90 ஹெர்ட்ஸ் refresh rate, 5,000 mAh பேட்டரியும் 30W டார்ட் சார்ஜருடன் இருக்கும். இவை அனைத்தும் ஃபைல்ஸ், மீடியா ஸ்ட்ரீமிங் மற்றும் கேம்களை விளையாடுவதற்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். மேலும் இது சோனி 64 மெகாபிக்சல் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், B&W லென்ஸ் மற்றும் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.   ALSO READ | ஜனவரி முதல் இந்த ஃபோன்களில் எல்லாம் whatsapp வேலை செய்யாது.. ஏன் தெரியுமா?

3 /5

இதன் விலை ரூ.19,000 முதல் தொடங்குகிறது. இந்த கேலக்ஸி M31s இந்த ஆண்டு பிரபலமான M-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். சாம்சங்கின் சொந்த 6.5 அங்குல FHD + சூப்பர் AMOLED டிஸ்பிளே இதில் இருக்கும். இது மீடியா ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங்கிற்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கக்கூடியது. டெப்த் மற்றும் மேக்ரோ லென்ஸுடன் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் மற்றும் இரட்டை 5 மெகாபிக்சல் சென்சார் கொண்ட 64 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இந்த போன் 6,000 mAh பேட்டரி உடன் எக்ஸினோஸ் 9611 செயலியைக் கொண்டுள்ளது.

4 /5

விவோ Y51 விலை 17,990 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. 6.5 அங்குல FHD+ திரை மற்றும் ஸ்னாப்டிராகன் 665 செயலி மற்றும் 18W வேகமான சார்ஜிங் கொண்ட 5,000 mAh பேட்டரியுடன் மல்டிடாஸ்கிங் ஆதரவை வழங்குகிறது. 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் அகல கோண கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

5 /5

நமது பட்டியலில் இறுதியாக இருப்பது ஓப்போ F17. இதன் விலை 16,990 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. இது வண்ணமயமான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைத் தவிர, கேமிங், மல்டி டாஸ்கிங் மற்றும் நல்ல பேட்டரி ஆயுள் போன்ற அடிப்படை தேவைகளையும் இது பூர்த்தி செய்கிறது. ஸ்னாப்டிராகன் 662 செயலி மற்றும் 4000 mAh பேட்டரியுடன் 6.4 அங்குல FHD+ AMOLED டிஸ்பிளே கிடைக்கும். 16 மெகாபிக்சல் மெயின் கேமரா, 8 மெகாபிக்சல் அகல-கோண கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் லென்ஸ் ஆகியவற்றுடன் ஒரு கேமரா தொகுப்பைக் கொண்டுள்ளது.