பெரும் ஆபத்தில் இந்தியர்கள்... எச்சரிக்கும் மருத்துவ உலகம் - உடல் உழைப்பே இல்லையாம்!

இந்திய மக்கள்தொகையில் பாதி பேர் உடல் உழைப்பு அல்லது உடல் சார்ந்த செயல்களையே செய்வதில்லை என அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது. 

  • Jun 27, 2024, 19:04 PM IST
1 /8

The Lancet Global Health என்ற மருத்துவ இதழ் ஒன்று உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளை முன்வைத்து மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.   

2 /8

அந்த அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் பாதி பேர் எவ்வித உடல் உழைப்பும் இன்றியும் உடல் சார்ந்த செயல்களும் இன்றியும் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து இதில் விரிவாக காணலாம்.   

3 /8

எவ்வித உடல் சார்ந்த செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2000ஆம் ஆண்டில் 22.3% ஆக இருந்ததாகவும், அது தற்போது 49.4% ஆக உச்சமூட்டும் வகையில் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

4 /8

அதிலும் இந்தியாவில் ஆண்களை விட பெண்களே உடல் சார்ந்த செயல்களில் குறைவாக ஈடுபடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது தொடர்ந்தால் 59.9%  ஆக 2030ஆம் ஆண்டில் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

5 /8

இதுபோன்ற உடல் சார்ந்த செயல்களில் ஈடுபடாவிட்டால் உடல் இயக்கம் என்பது பாழாகிவிடும். உடல் எடை அதிகரிப்பு மற்றும் மன நல பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகும்.   

6 /8

அதுமட்டுமின்றி மாரடைப்பு, நெஞ்சுவலி, சர்க்கரை நோய், ஹைப்பர்டென்ஷன், புற்றுநோய் கூட வர அதிக வாய்பபுள்ளது. உடலுழைப்பு குறைந்தால் உடலில் இதுபோன்ற உயிருக்கு ஆபாயகரமான நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது.   

7 /8

மிதமான முதல் துடிப்பான ஏரோபிக் செயல்பாட்டிற்கான WHO பரிந்துரைகள் கொடுத்துள்ளது. வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான செயல்பாடு என்பது இருக்க வேண்டும் அல்லது 75 நிமிட ஆக்ரோஷமான உடல் செயல்பாடு இருக்க வேண்டும்.   

8 /8

வயது வந்தவர்களில் உலகளவில் மொத்தம் 31 சதவீதம் பேர் உடல் ரீதியாக செயலற்றவர்களாக உள்ளனர். ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 49.4 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 45.7 சதவீதமாகவும் இருக்கிறது. மாறாக, பூட்டானில் 9.9 சதவீதமாகவும், நேபாளத்தில் 8.2 சதவீதமாகவும் செயல்படாத விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.