Resume Creation Tips Tamil : நேர்காணலின் போது கேட்கப்படும் கேள்விகள் கூட, உங்களது ரெஸ்யூம் எனப்படும் சுய விவரக்குறிப்பில் இருந்துதான் கேட்கப்படும். அப்படிப்பட்ட, சுய விவரக்குறிப்பை எப்படி தயார் செய்வது? இங்கு பார்ப்போம்.
Resume Creation Tips Tamil : வேலை தேடுபவர்கள் கைகளில் கண்டிப்பாக இருக்க வேண்டியது, ரெஸ்யூம் எனப்படும் சுய விவரக்குறிப்புதான். நேர்காணலுக்கு செல்லும் போது இதைத்தான் ஹெச்.ஆர்கள் பார்ப்பர். இந்த சுய விவரக்குறிப்பு சரியாக இல்லை என்றால் யாரும் நேர்காணலுக்காக கூட அழைக்க மாட்டார்கள். அப்படி, உங்கள் முகம் தெரிவதற்கு முன்னரே உங்களுக்கு முகமாக தெரியும் சுய விவரக்குறிப்பை எப்படி தயார் செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்!
முதல் முறை வேலை தேடுபவர்களாக இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு பிறகு வேலை தேடுபவர்களாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டியது, சுய விவரக்குறிப்பாகும். அவரவர்களின் வேலைக்கு ஏற்ப, அந்த சுய விவரக்குறிப்புகளின் விவரங்கள் மாறுபடும். இதில், உங்களை நேர்காணல் செய்பவர்களை ஈர்க்கும் வகையில் தயார் செய்திருந்தால் முதல் படியை வெற்றிகரமாக ஏறிவிடுவீர்கள். சரி, இதை தயார் செய்வது எப்படி?
ரெஸ்யூமை, எப்போதும் பல பக்கங்களுக்கு தயார் செய்யக்கூடாது. இந்த சுய விவரக்குறிப்பை, முடிந்த அளவிற்கு ஒரு பக்கத்தில் முடித்துவிட வேண்டும். ஏனென்றால், உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எளிமையாக எதிரில் இருக்கும் நபருக்கு எப்படி புரியும்படி இருக்க வேண்டும்.
நீங்கள், எந்த ரோலிற்காக விண்ணப்பிக்கிறீர்களோ அது குறித்த வேலை அனுபவங்களை தவறாமல் சுய விவரக்குறிப்பில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதோடு இல்லாமல், அதை ஹைலைட்டும் செய்ய வேண்டும்.
சுய விவரக்குறிப்பில், உங்களுக்கு என்ன தெரிந்த விஷயங்களை மட்டும் குறிப்பிட வேண்டும். தெரியாத விஷயங்களை பொய்யாக தெரியும் என குறிப்பிட வேண்டும். இதனால் உங்களது தன்நம்பிக்கையும் சிதையலாம். எனவே, இதை தவிர்க்கவும்.
இதற்கு முன்னர் வேலை செய்த இடத்தில் உங்களுக்கு கிடைத்த வெற்றிகளையும், நீங்கள் புரிந்த சாதனைகளையும் கண்டிப்பாக சுய விவரக்குறிப்பில் இருக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வேலை டக்கென்று கிடைக்கலாம். முதல் முறை வேலை தேடுபவர் என்றால், கல்லூரி நாட்களில் செய்த ப்ராஜெக்ட்கள், சாதனைகளை குறிப்பிடலாம்.
சுய விவரக்குறிப்பை படிப்பவர்களுக்கு புரியும் வகையில் உருவாக்க வேண்டும். எளிதான வார்த்தைகளை இதில் உபயோகிக்க வேண்டும். இதனால் நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்காணலை நடத்துபவரிடம் புரிய வைக்க வேண்டும்.
பலர், சுய விவரக்குறிப்பில் தங்களது புகைப்படங்களையும் இணைப்பர். இது, ஒரு சில முறை நேர்காணல் செய்பவருக்கு பிடிக்காமல் போகலாம். எனவே, இதை தவிர்ப்பது நல்லது.