ஒரே நேரத்தில் அனைத்து மெயில்களையும் சுலபமாக நீக்குவது எப்படி?

தனித்தனியாக ஒவ்வொரு மெயில்களை தேர்ந்தெடுத்து நீக்காமல் சுலமபமாக ஒரே கிளிக்கில் அனைத்தையும் டெலீட் செய்துவிடலாம்.

1 /4

முதலில் ஜிமெயிலுக்கு சென்று உங்கள் அக்கவுண்டை லாகின் செய்து உள்ளே போக வேண்டும். எந்த கேட்டகிரியில் உள்ள மெயிலை டெலீட் செய்ய விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.

2 /4

மேல்புறத்தில் ஆர்ச்சிவ் பாக்ஸுக்கு அருகேயுள்ள செக் பாக்ஸை க்ளிக் செய்ய வேண்டும், அதன் பின்னர் 'செலெக்ட் ஆல்...கான்வர்சேஷனை<கேட்டகிரி>' என்பதை தேர்வு செய்யவேண்டும்.

3 /4

அதனையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையில்லாத மெயில்கள் அனைத்தையும் டெலீட் செய்ய மேலே உள்ள டெலீட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், அதன் பின்னர் ஓகே என்பதை தேர்வு செய்யவேண்டும்.

4 /4

இவ்வாறு செய்வதன் மூலம் தேவையில்லாமல் ஒவ்வொரு மெயிலையும் தனித்தனியாக டெலீட் செய்யாமல் மொத்தமாக டெலீட் செய்துவிடலாம், இருப்பினும் இந்த அம்சம் டெஸ்க்டாப்பிற்கு மட்டும் தான் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.