சனி அதன் சொந்த ராசியான கும்பத்திற்கு மீண்டும் செல்கிறது. இதனால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட ராஜயோகம் வரவிருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்த நான்கு ராசிக்காரர்கள் திருமணம் குடும்பம் வேலை பணவரவு மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் சிறப்பான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமையப்போகிறது.
டிசம்பர் மாத கடைசி வாரமான 23 தேதி முதல் 29 தேதி வரை 12 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த மாற்றத்தினால் குறிப்பிட்ட இந்த நான்கு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மட்டும் சில யோகங்கள் உண்டாகும் மற்றும் சகல செல்வ பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் வேலையில் உயர் பதவிக்குச் செல்லா அதிகமாக வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் ஏதேனும் கல்வி கற்க முயன்றால் அதில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
வியாபார ரீதியாக நல்ல சாதகமான வரவுகள் வந்து சேரும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் ஏதேனும் நிலுவையிலிருந்தால் அது விரைவில் கைகூடி வரும்.
சிம்ம ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் சுகம் காண்பார்கள், மேலும் இவர்கள் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டு சந்தோஷமாக இருப்பார்கள். நிதி முதலீடு தொடர்பான விஷயங்களில் அதிக லாபம் ஈட்டுவார்கள்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடத்தில் கடைசி வாரத்தில் அதிர்ஷ்டம் மகாலட்சுமி போல் தேடி வரவிருக்கிறது.
துலாம் ராசிக்காரர்கள் சகல வல்ல செல்வ பாக்கியம் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் தம்பதி வாழ்க்கையில் ஏதேனும் மனகசப்கள் இருந்தால் சுமுகமாக முடிந்துவிடும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.