சொறி, சிரங்கால் அவதியா; இந்த வீட்டு வைத்தியத்தை வெச்சு குணப்படுத்தலாம்

ரிங்வோர்ம், சிரங்கு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது. இது உடலின் தோலில் எங்கும் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்று ஆகும். தோலில் ஏற்படும் இந்த சிரங்கை ஒழிக்க முதலில் தோலில் வசிக்கும் நுண்ணுயிர்கள் விரட்ட வேண்டும். இதனால் ஏற்படும் தோல் நமைச்சல், தடிப்புகள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தர சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன என்று தோல் மருத்துவர் கூறிகிறார். சரி சொறி சிரங்கை போக்கும் வீட்டு வைத்திய பொருட்கள் பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.

1 /5

தேங்காய் எண்ணெய் பல நோய்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெயுடன் எலுமிச்சம்பழம் மற்றும் எள் எண்ணெய் கலந்து, பின் அந்த பேஸ்ட்டை அரிப்பு உள்ள இடத்தில் தடவினால், விரைவில் அக்கி, சிரங்கு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும். சுகாதார நிபுணர்களும் இதைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

2 /5

வேப்பங்கொட்டையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே, அக்கி, சிரங்கு, அரிப்பு போன்றவற்றுக்கு வேப்ப இலைகள் அருமருந்தாக செயல்படும். இந்த இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, அரிப்பு உள்ள இடங்களில் தடவவும். இந்த செடிக்கு பூஞ்சையை அழிக்கும் ஆற்றல் உண்டு.

3 /5

மஞ்சள் பல தோல் நோய்களுக்கு அருமருந்து என்று கூறப்படுகிறது. ஒரு துண்டு மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக தயார் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தால் ரிங்வோர்ம் மறைவதுடன், அரிப்பும் நீங்கும்.

4 /5

நிலாவாரை செடியை அரைத்து தைலம் தயாரித்து, ரிங்வோர்ம், சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவவும். இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

5 /5

சாமந்தி பூவின் உதவியுடன் ரிங்வோர்ம், சிரங்கு, அரிப்பு போன்றவற்றை போக்கலாம். இந்த நறுமணப் பூவில் ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும். (பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ தமிழ் நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)