டூப்ளிகேட் சார்ஜர்கள் செல்போனை காலி செய்து விடும்... கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட நிலையில், அவை இல்லை என்றால் பல பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், செல்போனை நல்ல நிலையில் வைத்திருப்பதும் முக்கியம்.

 

ஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் சார்ஜர், தரமானதாகவும் வேகமாக சார்ஜ் செய்வதாகவும், போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால், போன் சேதமடையும் வாய்ப்பு உண்டு.

1 /8

செல்போன்கள், தகவல் பரிமாற்றத்திற்கான சாதனமாக மட்டுமல்லாமல், பணப்பரிவர்த்தனை, ஆவணங்கள் மற்றும் புகைப்பட பரிமாற்றம் உள்ளிட்ட பலவித முக்கியமான பணிகளுக்கு, அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. அவை இல்லை என்றால் பல பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.    

2 /8

டூப்ளிகேட் சார்ஜர்கள்: செல்போன்கள் எப்போதும் நல்ல நிலையில் இருக்க, சரியான சார்ஜரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது முக்கியம். டூப்ளிகேட் சார்ஜர்கள் செல்போனை காலி செய்துவிடும். இந்நிலையில், நீங்கள் வாங்கும் சார்ஜர் ஒரிஜினலான சார்ஜராக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

3 /8

ஒரிஜினலைப் போலவே தோற்றமளிக்கும் டூப்ளிகேட்:  பேக்கிங், வடிவமைப்பு மற்றும் பெயர்கள் என அனைத்தும் ஒரிஜினலை போலவே கொண்டுள்ள டூப்ளிகேட் பொருட்களை வேறுபடுத்தி அறிவது கடினம் தான். பார்த்தவுடனே கண்டுபிடிக்கும் வகையில் எளிதானதும் அல்ல.  

4 /8

UMANG செயலி: நீங்கள் வாங்கும் சார்ஜர் ஒரிஜினல் தானா என்பதை உமங் செயலியின் உதவியுடன் கண்டறியலாம். உமங் செயலியை பதிவிறக்கி உங்கள் ப்ரோபைலை உருவாக்கி, 'BIS R number verify'  என்ற அம்சத்தின் உதவியுடன் சார்ஜரை அடையாளம் காணலாம்.  

5 /8

எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியாளர்கள் அனைவரும் BIS பதிவை செய்ய வேண்டும் என்ற நிலையில், நீங்கள் வாங்கிய சார்ஜரில் இருக்கும் பிஐஎஸ் ஆர் நம்பர் என்னும் R- எண்ணை உள்ளிட்டால், அந்த சாதனத்தை தயாரித்தவர் யார் என்று முழு விவரங்களும் இருக்கும். இதன் மூலம் உங்கள் தயாரிப்பு உண்மையானது தானா அல்லது டூப்ளிகேட்டா என்பதை அறிந்து கொள்ளலாம்.  

6 /8

அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம்: எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் சார்ஜரை வாங்குவது நல்லது. இதனால் டூப்ளிகேட் வலையில் விழாமல் தவிர்க்கலாம். செலவு கொஞ்சம் அதிகமானாலும், உங்கள் சாதனம் பாதுகாப்பாக இருக்கும்.  

7 /8

பார்கோட் ஸ்கேன்: நீங்கள் வாங்கிய சார்ஜரின் பெட்டியில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்வதன் மூலமும், நீங்கள் வாங்கிய சார்ஜர் உண்மையானதா ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதை அறிந்து கொள்ளலாம்.

8 /8

பாதுகாப்பான தரமான சார்ஜர்: ஸ்மார்ட்போன் எப்போதும் நல்ல நிலையில் இருக்க, அதனை சார்ஜ் செய்ய பயன்படுத்தும் சார்ஜர், தரமானதாகவும், வேகமாக சார்ஜ் செய்வதாகவும், போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.