வெளிநாடு போகும் கனவு நனவாக விருப்பம் இருந்தாலும் பணம் இல்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்? இதோ சூப்பர் ஆஃபர்! இந்த நாடுகளில் நீங்க குடியேறினா லட்சக்கணக்கில் அந்த நாடே பணம் கொடுக்கும்!
அப்புறம் என்ன? பாஸ்போர்ட்டை ரெடி செய்யுங்க!
வெர்மாண்ட் அரசு 2 ஆண்டுகள் தங்குவதற்கு 7.4 லட்சம் ரூபாய் கொடுக்க தயாராக உள்ளது. இந்த இடத்தின் இயற்கை அழகு சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாக உள்ளது.
ஸ்பெயினில் உள்ள இந்த சிறிய கிராமத்தில் 1,000 பேர் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒருபகுதியாக, இங்கு தங்கும் ஒவ்வொரு ஜோடிக்கும் 3,000 யூரோக்கள் அதாவது சுமார் 1.5 லட்சம் ரூபாயை அரசாங்கம் வழங்குகிறது. இந்தக் கிராமத்தில் பிறக்கும் குழந்தைக்கும் அரசாங்கத்திடம் இருந்து சுமார் 1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு சிறிய நகரமான அல்பினென், பாலாடைக்கட்டிகளை தயாரிப்பதில் பிரபலமானது. 45 வயதுக்கு குறைவானவர்கள் இந்த ஊரில் குடியேறினால் 20 லட்சம் ரூபாய் தருகிறது. இங்கு இடம்மாறும் தம்பதிகளுக்கு 40 லட்சமும், அவர்களின் குழந்தைக்கு 8 லட்சமும் கிடைக்கும். ஆனால் இந்த ஊரில் 10 வருடங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.
இந்த நகரம் இங்குள்ள மக்களுக்கு வீடு வாங்க வட்டியின்றி ரூ.7.4 லட்சம் கடனாக வழங்குகிறது. இதனுடன், நீங்கள் 5 ஆண்டுகள் இங்கு தங்கினால், உங்கள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மேலும் இங்குள்ள நியூ ஹேவன் பப்ளிக் பள்ளியில் பட்டம் பெறுபவர்களுக்கு கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம்.
2010ல், சிலியின் தலைநகர் சாண்டியாகோ 'ஸ்டார்-அப் திட்டத்தை' துவக்கியது. 37 லட்ச ரூபாய் மானியத்துடன் 3 வருட வேலைக்கான சுவாரஸ்யமான யோசனையுடன் ஒரு ஸ்டார்ட்-அப் திட்டத்தை வழங்கியது. இந்த திட்டத்தில், 1 வருட வேலை விசா, வேலை செய்வதற்கான இடம் மற்றும் நெட்வொர்க் வசதியும் இலவசம் கேண்டெலா மற்றும் கலாப்ரியா
கேண்டெலா மற்றும் கலாப்ரியாஆகியவை பணப் பரிமாற்றத்திற்கான நிதிச் சலுகைகளை வழங்கும் சில இடங்கள். கேண்டெலா தனிநபர்களுக்கு 800 யூரோக்கள் (சுமார் ரூ. 69,090), தம்பதிகளுக்கு € 1,200 (தோராயமாக ரூ. 1,03,639) மற்றும் குடும்பங்களுக்கு € 2,000 (தோராயமாக ரூ. 1,72,732) வழங்குகிறது. கலாப்ரியாவில் குடியேற அதிகபட்ச வயது 40 ஆகும்.