மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

Health Insurance: குடும்ப உறுப்பினர்களுக்கான சிறந்த காப்பிட்டு திட்டம் என்பது,  நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்றால் அது மிகையில்லை.

Health Insurance: குடும்ப உறுப்பினர்களுக்கான சிறந்த காப்பிட்டு திட்டம் என்பது,  நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்றால் அது மிகையில்லை. இது பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல் நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.

1 /6

மருத்துவ செலவுகள், நடுத்தர வர்த்தகத்தினர் சமாளிக்க முடியாத அளவில் தான் உள்ளது. ஒரு முறை மருத்துவ மனைக்குள் நுழைந்தாலே நமது சேமிப்புகள் அனைத்தும் காலியாகி விடும் என்ற நிலை உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் நமது குடும்ப உறுப்பினர்களுக்கான பொருத்தமான ஒரு சிறந்த காப்பீடு எடுப்பதன் மூலம், நாம் நிம்மத்தியாக இருக்கலாம். 

2 /6

குடும்ப உறுப்பினர்களுக்கான சிறந்த உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையை வாங்கும் போது, ​​அதன் கவரேஜின் நன்மைகளை விரிவாகப் படிக்கவும். நோய் அல்லது விபத்தின் போது சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, பாலிசி தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிப்பது அவசியம்.  

3 /6

மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை ஆகியவற்றைக் கவர் செய்யும் வசதி உள்ளதா, பாலிசியின் கால அளவு என்ன என்பதையும் பார்க்கவும். 

4 /6

பல பாலிசிகளில், நாள்பட்ட நோய்கள் அல்லது 30 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட நோய்கள் காப்பீட்டில் சேர்க்கபடுவதில்லை. அத்தகைய பாலிசி எடுப்பதை தவிர்க்கவும்.

5 /6

நாம் தேர்ந்தெடுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனம், நம்பிக்கைக்கு உரிய நிறுவனமாக இருக்க வேண்டும். அதாவது அவசர காலத்தில் சேவை வழங்குவதிலும், க்ளைகளை செட்டில் செய்வதிலும் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாத மருத்துவ காப்பீட்டு நிறுவனமாக இருக்க வேண்டும்.

6 /6

மருத்துவ காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். அதை தவற விடக்கூடாது. தேவைப்பட்டால், ஆட்டோ ரென்யூவல் முறையை தேர்வு செய்யவும். இதனால் காப்பிட்டை புதுப்பிப்பதை தவற விடும் வாய்ப்பு ஏற்படாது.