Farmers: சுதந்திர தினத்தையொட்டி, 'திரங்கா டிராக்டர் அணிவகுப்பு நடத்திய பெண் விவசாயிகள்

75 வது சுதந்திர தினத்தை  விவசாயத் தொழிலாளர்களின் சுதந்திர திருநாள் என்ற பொருள் கொள்ளும் "கிசான் மஸ்தூர் ஆசாதி சங்கம் திவாஸ்" நாளை இந்திய விவசாயிகள் கொண்டாடினார்கள்.

சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, சுதந்திர தினத்தன்று ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பு நடத்தினார்கள்.

Also Read | பெரியாரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின் - வைரமுத்து

All Photos Courtesy: ANI 

1 /5

பெண்கள் முன்நின்று வழிநடத்திய அணிவகுப்பு இது. மூவர்ணக் கொடியையும் பெண்களே ஏற்றினார்கள் 

2 /5

சுமார் 5,000 வாகனங்கள் மற்றும் 20,000 விவசாயிகள் இன்றைய டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்றனர்

3 /5

ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் உச்சனா காலன் நகரில் இருந்து டிராக்டர் அணிவகுப்பு தொடங்கியது. விவசாயிகள் தங்கள் விவசாய கலாச்சாரம் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளின் கண்காட்சியை எடுத்த பிறகு உச்சனா காலனின் பருத்தி மண்டியில் தங்கள் அணிவகுப்பை நிறைவு செய்தனர். 

4 /5

கட்கர் சுங்கச்சாவடி, நர்வானா, ஜூலானா மற்றும் சஃபிடான் தொகுதி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்கள் பங்கேற்கும் டிராக்டர் அணிவகுப்பு நடைபெற்றது.

5 /5

அணிவகுப்பு முடியும் வரை விவசாயிகளின் சொந்த தன்னார்வலர்கள் முழு சூழ்நிலையையும் கண்காணித்தார்கள்.