Umling LA Pass: உலகிலேயே மிக உயரிய இடத்தில் சாலை அமைத்து இந்தியா சாதனை..!!

எல்லை சாலைகள் கட்டுமான அமைப்பு, இந்தியாவில், லடாக்கில்  19,300 அடி உயரத்தில் சாலை அமைத்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கபட்டுள்ள சாலை என்ற சாதனையை ப்டைத்துள்ளது இந்தியா. இதன் மூலம் லடாக்கில் சுற்றுலா மேம்படுத்தப்படுவதோடு,  இப்போது வாகனங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்தப் பகுதிகளுக்கு நேரடியாகச் செல்ல முடியும். இந்த சாலை கிழக்கு லடாக்கின் மற்ற பகுதிகளை உம்லிங்லா  (Umlingla Pass) பாஸ் வழியாக இணைக்கிறது.

1 /5

எல்லை சாலை அமைப்பு (BRO) கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் கிழக்கு லடாக் பகுதியில் சாலை அமைத்துள்ளது. இந்த சாலை 52 கிமீ நீளம் கொண்டது. இந்த சாலை உம்லிங்லா கணவாய் வழியாக செல்கிறது. (புகைப்படம் - Twitter@PIB_India)

2 /5

கிழக்கு லடாக்கில், உம்லிங்லா கணவாயில் 19 ஆயிரம் அடிக்கு மேல் உயரத்தில் சவாலான தட்ப நிலை நிலவுகிறது. குளிர்காலத்தில் இங்கு வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை குறையும். இங்கு ஆக்ஸிஜன் அளவும் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. (புகைப்படம்- Twitter@PIB_India)  

3 /5

தெற்கு அமெரிக்க நாடான பொலிவியாவில் 18,953 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலை தான் இது வரை உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சாலையாக இருந்தது. இந்த சாதனையை கிழக்கு லடாக்கில் 19,300 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலை முறியடித்துள்ளது  இந்த சாலை ஊதுருங்கு (Uturuncu) எரிமலைக்கு செல்கிறது. (புகைப்படம் - ராய்ட்டர்ஸ்)

4 /5

ஐரோப்பாவின் மிக உயரமான சாலை ரஷ்யாவில் உள்ளது. இந்த சாலை எல்ப்ரஸ் (Elbrus) மலையில் உள்ளது. இந்த சாலை 13,267 அடி உயரத்தில் உள்ளது. (புகைப்படம் - ராய்ட்டர்ஸ்)

5 /5

ஸ்பெயினில் 11,135 அடி உயரத்தில் ஒரு சாலை உள்ளது. இந்த சாலை வேலெட்டா (Veleta) சிகரத்தில் உள்ளது. பைக் அல்லது காரில் இங்கு பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. (புகைப்படம் - ராய்ட்டர்ஸ்)