Olympic wrestlers in India: ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த பதக்கம் வென்ற இந்தியர்கள்

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நேரத்தில், குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்திய மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா. 

இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் அனைத்திலும் சேர்த்து பதக்கம் வென்ற ஐந்தாவது இந்திய மல்யுத்த வீரர் ஆவார். நாளை இவர் பெறுவது தங்க பதக்கம் என்றால், இந்திய மல்யுத்த வீரர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர்கள்...

Also Read | வறுமையிலிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கான பயணத்தில் ராணி ராம்பால்

1 /5

2012 லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத் வெண்கலம் வென்றார்.

2 /5

சுஷில் குமார் 2012 ஆம் ஆண்டு லண்டன் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2008 பெய்ஜிங் விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், இரு ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்ற இந்தியாவின் ஒரே மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.  

3 /5

சாக்ஷி மாலிக் 2016 ரியோ விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தினார்.

4 /5

டோக்கியோ ஒலிம்பிக்கில் கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவுக்கு எதிராக வெற்றிபெற்ற ரவிக்குமார் தஹியா,  ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல்  57 கிலோ மல்யுத்தப் பிரிவில் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.

5 /5

கேடி ஜாதவ் இந்தியாவின் முதல் மல்யுத்த வீரர். 1952 ஹெல்சின்கி விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார். முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் மல்யுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் கே.டி.ஜாதவ்.