CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!

Written ByYuvashree
Published: Apr 15, 2024, 12:58 PM IST|Updated: Apr 15, 2024, 12:58 PM IST

IPL 2024 CSK vs MI Match Viral Memes : ஐபிஎல் 2024 போட்டியில் நேற்று பரபரப்பான மேட்ச் நடைப்பெற்றது. இதில், சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ரசிகர்கள் இணையத்தில் பல நகைச்சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். 

IPL 2024 CSK vs MI Match Viral Memes : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்ததில் இருந்து, இணையத்தில் அது குறித்த மீம்ஸ்கள் தொடர்ந்து வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. வான்கடே மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. சென்னை அணி ரசிகர்களுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கும் எப்போதும் ஒத்து வராது என்பது ஊரரிந்த விஷயம். நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 207 ரன்களை குவித்திருந்தது. 2வது இன்னிங்க்ஸில் களமிறங்கிய மும்பை அணி, ஆரம்பத்தில் ரன்களை விரட்டினாலும் மிடில் ஓவர்ஸ்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து நிலை தடுமாறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால், சென்னை அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேம் சேஞ்சராக தல தோனி அடித்த 3 ஹாட்ரிக் சிக்ஸர்களும், பதீரானாவின் விக்கெட்டுகளும் பார்க்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை, ரோகித் சர்மா சதம் அடித்தும் வீண் ஆனது. இதையடுத்து, நேற்றைய போட்டி குறித்து ரசிகர்கள் பலர் இணையத்தில் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

 

 

MI Memes1/10

MI Memes

ஒரு காலத்துல எப்படியிருந்த டீம்..இப்போ இப்படி ஆயிருச்சே..

MS Dhoni Memes2/10

MS Dhoni Memes

சி.எஸ்.கே ரசிகர்கள் பி லைக் : “இது போதும் எங்களுக்கு..இது போதுமே...”

CSK Tamil Memes3/10

CSK Tamil Memes

ரீல் ரியல் ஆன தருணம்! தோனியின் ரியாக்‌ஷனுக்கு லைக்ஸ் குவிகிறது

CSK Players4/10

CSK Players

சென்னை அணியை தாங்கும் தூண்கள் இவர்கள்! 

CSK Memes5/10

CSK Memes

நேற்றைய ஆட்டத்தில் டேரில் மிட்செல் ஒழுங்காக விளையாடாததை தொடர்ந்து, தோனி களமிறங்கி கதகளி ஆடினார். இதையடுத்து நெட்டிசன்கள், மிட்செலை மீம்ஸ்களால் தாக்கி கொண்டிருந்தனர். 

MS Dhoni Memes6/10

MS Dhoni Memes

தோனி நேற்று ஒரு ரசிகை தவறவிட்ட பந்தை அவரிடம் திருப்பி கொடுத்தார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

MI Batting7/10

MI Batting

“ஒரு நிமிஷம் மரண பயத்த காட்டிடாங்க பரமா” மொமண்ட்..

Dhoni Meme8/10

Dhoni Meme

தோனி, நேற்று ஒரு ரசிகைக்கு அந்த பந்தை எடுத்து கொடுத்த சம்பவம் நெட்டிசன்களால் புகழப்பட்டு வருகிறது

Dhoni Meme9/10

Dhoni Meme

நல்ல வேள, பதீரானா வந்து பவுலிங் போட்டாரு..இல்லாட்டி சேசிங்க எப்பையோ முடிச்சிருப்பாங்க

CSK vs MI10/10

CSK vs MI

MI கம்-பேக் கொடுக்குமா? “காத்திருந்து..காத்திருந்து காலங்கள் போகுதடி..”