உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கா? இத மட்டும் சாப்பிடுங்க போதும்

Iron Deficiency: உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். சோர்வு, பலவீனம், வெளிர் தோல், சுவாசிப்பதில் சிரமம், மயக்கம், தலைவலி, அதிகரித்த இதயத்துடிப்பு, மஞ்சள் தோல், பலவீனம், மார்பு வலி, கை கால்களில் குளிர்ச்சி, முடி உதிர்தல், வாயின் ஓரங்களில் வெடிப்பு, அதிக சோர்வு உணர்வு, பசியின்மை, தொண்டை புண் மற்றும் நாக்கில் வீக்கம் ஆகியவை இரும்புச்சத்து குறைபாட்டின் போது தெரியும் அறிகுறிகளில் சிலவாகும். இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க இந்த காய்கள் / பழங்கள் உதவும்

1 /5

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க, தினமும் ஒரு பீட்ரூட்டை உட்கொள்ளுங்கள். பீட்ரூட்டை உட்கொள்வதால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இரத்த பற்றாக்குறையை சமாளிக்க பீட்ரூட் சாப்பிடுவதை மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர்.  

2 /5

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க, கீரையை உட்கொள்ள வேண்டும். கால்சியம், சோடியம், தாது உப்புக்கள், குளோரின், பாஸ்பரஸ் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் கீரையில் இருப்பதால், உடலில் உள்ள இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்கிறது.

3 /5

மாதுளம்பழம் சாப்பிடுவது எவ்வளவு சுவையோ அதே அளவு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மாதுளை சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு சரியாகும். மாதுளம் பழச்சாறு குடிப்பதால் இரத்த சோகை போன்ற நோய்கள் நீங்கும்.  

4 /5

கொய்யாப்பழத்தை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள ரத்தப் பற்றாக்குறை நீங்கும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த கொய்யாவை சாட் செய்து சாப்பிடலாம்.  

5 /5

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்க, பச்சை காய்கறிகளை சாப்பிடுங்கள். பச்சை காய்கறிகள் ஹீமோகுளோபினை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)