Kanduri Urs Festival: திண்டுக்கல் நாகல் நகர் சந்தை ரோடு பள்ளிவாசலில் 20 ஆயிரம் பேருக்கு மெகா கைமா பிரியாணி, 3 ஆயிரம் கிலோ அரிசி, ஆயிரம் கிலோ கறியுடன் தயாரிக்கப்பட்டு காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் நாகல் ஜூம் ஆ பள்ளிவாசலில், முகமது நபி நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 5ம் ஆண்டாக பிரியாணி விநியோகம் தொடர்கிறது
பள்ளி வாசல் தலைவர் அகமது புகாரி தலைமையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு சுட சுட கைமா பிரியாணி வழங்கப்பட்டது
திண்டுக்கல்லில் oரே நாளில் 20000 பேருக்கு இலவச மட்டன் பிரியாணி கிடைத்தது
3 ஆயிரம் கிலோ அரிசி, 1000 கிலோ ஆட்டு கறி, 600 கிலோ கத்தரிக்காய் கொண்டு செய்யப்பட்ட கைமா பிரியாணி
நாகல் நகர், வேடபட்டி, ரவுண்டு ரோடு, பேகம்பூர், திருமலைசாமிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பிரியாணி வாங்கிச் சென்றனர்
பிரியாணி வாங்கிச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள், ஜாதி மத வேறுபாடின்றி நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை மகிழ்ச்சியோடு பெற்று சென்றனர்.