உடலுக்கு மிக முக்கியமான கனிமமான, பொட்டாசியம் நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. ஆனால் பொட்டாசியத்தின் மிக முக்கியமான செயல்பாடு இதயத் துடிப்புக்கு உதவுவதாகும். உடலில் பொட்டாசியம் சத்து குறைபாடு தீவிரமாக இருந்தால், அது மருத்துவத்தில் ஹைபோகாலேமியா (Hypokalemia) என்று அழைக்கப்படுகிறது.
இதயத் துடிப்பு சீரற்றதாக, மிகவும் வேகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது ஹைபோகாலேமியா அல்லது பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருந்தால், இதன் காரணமாக இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகி, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் (ventricular fibrillation) போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.
இளநீரில் பொட்டாஷியம் அதிக அளவில் காணப்படுவதோடு, அதில் மக்னீசியம், கால்சியம், உப்பு, மாங்கனீஸ் ஆகியவையும் நிறைந்துள்ளன.
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் மாவுச்சத்து அதிகம் என்றாலும், அதில் புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை உள்ளன.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆண்டு முழுவதும் கிடைக்கும். சுவையான வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும்.
ராஜ்மாவில் புரதம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் எடை இழப்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்.
கீரை: வேகவைத்த கீரையின், ஒரு கோப்பைக்கு 839 மி.கி பொட்டாசியம் உள்ளதால் எடை இழக்க விரும்பும் மக்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.