Kia Motors அறிமுகம் செய்யும் Kia Carens: விலை, அம்சங்கள், முன்பதிவு விவரங்கள் இதோ

கியா மோட்டார் (KIA Motor) இந்திய வாகன சந்தையில், வியாழனன்று, தனது புதிய SUV Kia Carens-ன் முதல் தோற்றத்தை உலகின் முன் அறிமுகம் செய்தது. இது 7 இருக்கைகள் கொண்ட SUV ஆகும். இதில் உட்புற இடம் விசாலமாக உள்ளது. இந்த புதிய கார் 15 பிப்ரவரி 2022 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். 

1 /5

கியா கேரன்ஸ்ஸின் வெளிப்புறம், ஹை டெக் ஸ்டைலிங் கொண்டது. உட்புற தோற்றமும் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. முன்பக்கத்தில் கியாவின் தனித்துவமான டைகர் ஃபேஸ் டிசைன், ஹைலைட் செய்யப்பட்ட இன்டேக் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டேடைம் ரன்னிங் லைட்ஸ் (டிஆர்எல்) ஆகியவவை உள்ளன. 

2 /5

கியா கேரன்ஸ்ஸில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் சார்ஜிங், ஏர்பேக்குகள் போன்ற பல அம்சங்கள் உள்ளன. மேலும் 10.25-இன்ச் ஆடியோ வீடியோ நேவிகேஷன் டெலிமேடிக்ஸ் (AVNT) டேஷ் போர்டின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. 

3 /5

நிறுவனம் Kia Carens இன் உலக பிரிமியரை செய்துள்ளது. ஆனால் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் நிறுவனம் வழங்கவில்லை. 15 முதல் 20 லட்சத்திற்குள் இதன் விலை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

4 /5

கியா கார்ன்ஸ் எஸ்யூவி-க்கான முன்பதிவு ஜனவரி நடுப்பகுதியில் இருந்து தொடங்கும் என்று கியா மோட்டார்ஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் அதன் நான்காவது மற்றும் முதல் 7-சீட்டர் காரான Kia Carens இன் முதல் காட்சியை Kia India காட்டியது. இது இந்திய சந்தையில்  நிறுவனத்தின் முதல் 3 வரிசை 7 இருக்கைகள் கொண்ட காராக இருக்கும்.  

5 /5

கியா கேரன்ஸ் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த எஸ்யூவியில் மொத்தம் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், இந்த எஸ்யூவியில் இஎஸ்பி, ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், ஈஎஸ்பி மற்றும் எச்எச்சி ஆகியவையும் பொருத்தப்பட்டிருக்கும்.