ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளும்..!!

ஜூன் மாத கிரக பெயர்ச்சி பலன்கள்: ஜூன் மாதத்தில் சூரியன், சனி உள்ளிட்ட 6 கிரகங்களின் இயக்கம் மாறும் நிலையில் மீனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதத்தில், சூரியன் மற்றும் சனி உட்பட பல முக்கிய கிரகங்களில் நிலையில் மாற்றம் ஏற்படும். இதில் பெயர்ச்சிகள் வக்ர பெயர்ச்சிகள் ஆகியவை அடங்கும். இந்நிலையில், ஜூன் மாதம் சில ராசிகளுக்கு பலன்கள் அவ்வளவாக நன்றாக இல்லை என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.

1 /8

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள் 2024: ஜூன் மாதம் செவ்வாய் பெயற்சியில் இருந்து தொடங்குகிறது. செவ்வாய் ஜூன் 1 ஆம் தேதி செவ்வாய் மேஷத்திற்கு மாறப் போகிறது. திருமண வாழ்க்கைக்கும் அழகுக்கும் காரணமான சுக்கிரன் ஜூன் 3-ம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். 

2 /8

புதன் பெயர்ச்சி: ஜூன் 14-ம் தேதி கிரகங்களின் அதிபதியான புதன் மிதுன ராசியில் பிரவேசிக்க உள்ள நிலையில் ஜூன் 29-ம் தேதி மீண்டும் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்வார். அதாவது புதன், இரு முறை பெயர்ச்சி அடைகிறார்.

3 /8

சூரியன் பெயர்ச்சி: ஜூன் 15 அன்று, கிரகங்களின் ராஜாவான சூரியன் மிதுனத்தில் நுழைவதால், சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை  மிதுனத்தில் உருவாகும். மாத இறுதியில் அதாவது ஜூன் 29ல் சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிதுனம், மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் ஏற்றத் தாழ்வுகளைத் தரும். 

4 /8

மகர ராசி: ஜூன் மாதத்தில் முக்கிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மகர ராசிக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள். தடைகளைத் தவிர்க்க, பணம் தொடர்பான விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும்.

5 /8

மீன ராசி: ஜூன் மாதத்தில் கிரகங்களின் ராசி மாற்றத்தால்,மீன ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். காதல் வாழ்க்கையில் தவறான புரிதல்கள் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக உறவுகளில் விரிசல் ஏற்படலாம்.  உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

6 /8

மிதுன ராசி: ஜூன் மாதத்தில் கிரகங்களின் ராசி மாற்றத்தின் பலன் காரணமாக, மிதுன ராசிக்காரர்கள் பல விஷயங்களில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் வேலையில் அதிக திருப்தியைப் பெற மாட்டீர்கள், மேலும் பணம் சம்பாதிப்பதில் சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், ஈகோ காரணமாக உறவுகளில் பரஸ்பர புரிதல் குறைபாடு இருக்கலாம்.

7 /8

விருச்சிக ராசி: ஜூன் மாதத்தில் கிரகங்களின் ராசி மாற்றத்தால், விருச்சிக ராசிக்காரர்கள் கவனக்குறைவால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில், மேலதிகாரிகளால் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வாழ்க்கையில் கொஞ்சம் கவனக்குறைவால் சட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ளலாம், இதையெல்லாம் விட்டு விலகி இருங்கள். 

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.