தற்போது இந்தியாவில் மொபைல் ஃபோனை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது மிகவும் அரிதாக போய் விட்டது. தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. மொபைல் போன் என் எப்போதும் 10 இலக்க எண்ணாக இருக்கும். ஒருவருக்கு போன் செய்யும் போது ஒன்றிரண்டு எண்களை மறந்து ட்யல் செய்தால், போன் அழைப்பு வேலை செய்யாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மொபைல் போன் எண்கள் 10 இலக்க எண்களாக இருப்பதன் காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஏன் 10 இலக்க எண்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? இந்தியாவில் நீண்ட காலத்திற்கு முன்பு 9 இலக்க எண்கள் பயன்படுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், பின்னர் எண்களின் எண்ணிக்கை 9 இலக்கங்களில் இருந்து 10 இலக்கங்களாக அதிகரிக்கப்பட்டது.
இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? உண்மையில், இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண் பயன்பாட்டில், அரசாங்கத்தின் தேசிய எண்ணிடல் திட்டம் அதாவது NNPயின் பங்கு உள்ளது.
மொபைல் எண் ஒரு இலக்கமாக இருந்தால், 0 முதல் 9 வரையிலான எண்ணை 10 பேர் மட்டுமே பெற முடியும். மறுபுறம், 2 இலக்க மொபைல் எண் இருந்தால், 100 பேர் மட்டுமே எண்ணைப் பெற முடியும். இலக்கம் கூட கூட, அதிலிருந்து கிடைக்கும் எண்களும் அதிகரிக்கும். இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள பெருமளவு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் தொலைபேசி எண் கிடைக்கும் வகையில், 10 இலக்க தொலைபேசி எண்களை நீக்க இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண்கள் இருப்பதற்கு மக்கள் தொகையும் ஒரு முக்கிய காரணம். இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 131 கோடி. இதன் மூலம், 1 முதல் 9 இலக்கங்கள் வரையிலான எண்களில் இருந்து ஒரு சிலருக்கு தொலைபேசி எண்களை மட்டுமே தயாரிக்க முடியும். அதே நேரத்தில், 10 இலக்கங்கள் இருந்தால் கோடிக்கணக்கான தொலைபேசி எண்களைத் அதிலிருந்து உருவாக்கலாம். இதன் மூலம், நாட்டின் இவ்வளவு அதிக மக்கள்தொகை உள்ள நிலையில் உள்ள அனைவருக்கும் எண்களை எளிதாக விநியோகிக்க முடியும்.
2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் 10 இலக்கங்களுக்குப் பதிலாக 11 இலக்க மொபைல் எண்கள் பயன்பாடு தொடங்கலாம் என்று ஒரு செய்தி வந்தது. ஆனால், இதனை TRAI திட்டவட்டமாக மறுத்துவிட்டது. எனிமும், நாட்டில் மொபைல் சந்தாதாரர்கள் அதிகரித்து வருவதால், புதிய தேசிய எண் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என TRAI மத்திய அரசுக்கு முன்னதாக பரிந்துரை செய்திருந்தது.