உலகின் ‘7’ மர்மமான இடங்கள்; இவையும் உலக அதிசயங்கள் தான்..!!!

உலகில் மக்கள் செல்ல ஆர்வமாக உள்ள பல இடங்கள் இருந்தாலும். செல்ல முடியாத  நினைத்தாலே திகிலை ஊட்டும் மர்மமான இடங்களும் உலகில் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

  • Dec 16, 2021, 11:21 AM IST
1 /7

பிரேசிலில் பாம்பு தீவு உள்ளது, அங்கு செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்குக் காரணம், இந்த தீவில் ஆயிரக்கணக்கான கொடிய விஷபாம்புகள் இருப்பது தான். ஆனால் அதையும் தாண்டி சட்டவிரோதமாக இந்தத் தீவைப் பார்க்கச் செல்கிறார்கள். உலகின் அதிக நச்சுத் தன்மை கொண்ட ஆபத்தான பாம்பான தங்க ஈட்டி தலைகள் என்னும் பாம்பு இங்கு காணப்படுகின்றன. தீவில் உள்ள அந்த நச்சுப் பாம்பின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானது என கூறுகின்றனர்.  

2 /7

ரஷ்யாவில் பேய்கள் வசிப்பத்தாகவும், அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவும், மர்மமாகவும் உள்ள பல இடங்களை கொண்ட Mezgorye நகரம் தெற்கு யூரல் மலைகளில் உள்ளது. இங்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என்பதற்காக இரண்டு பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு வெளியாட்கள் வருவதற்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும், எப்படி ஒரே இடத்தில் இந்த அளவிற்கு மர்மமான இடங்கள் உருவானது என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

3 /7

சுர்ட்சே தீவு உலகின் புதிய தீவு ஆகும். 1963 மற்றும் 1967 க்கு இடையில் எரிமலை வெடிப்பு காரணமாக தீவு உருவாக்கப்பட்டது. இங்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுச்சூழலைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு செல்ல முடியும். இந்த தீவு ஐஸ்லாந்து நாட்டிற்கு சொந்தமானது.

4 /7

Tomb of Qin Shi Huang கல்லறை சீனாவின் முதல் ஆட்சியாளரான கின் ஷி ஹுவாங்கிற்கு சொந்தமானது, இதனை உலகம் முதன்முறையாக டெரகோட்டா இராணுவத்தை கண்டறிந்தது. இந்த இடம் 1974  கண்டறியப்பட்டது. வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை மிகவும் மர்மமானதாக கருதுகின்றனர்.  இந்த கல்லறையின் பெரும்பகுதி இன்னும் சீல் வைக்கப்பட்டுள்ளது.   

5 /7

யாரும் செல்ல அனுமதிக்கப்படாத  இடம் என்பதால், குளோபல் சீட் வால்ட் (Svalbard Global Seed Vault) உலகின் மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது.  உலகில் உள்ள 100 மில்லியன் தாவரங்களின் விதைகள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பேரழிவு ஏதேனும் ஏற்பட்டால், இந்த விதைகளைப் பயன்படுத்தி உலகை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த பெட்டகம் கட்டப்பட்டுள்ளது. இந்த பெட்டகம் 2008 இல் திறக்கப்பட்டது பூகம்பம் மற்றும் எந்த விதமான வெடிப்பினாலும் பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  

6 /7

போர்ட் நாக்ஸ் (Fort Knox) அமெரிக்காவின் தங்க இருப்பில் பாதி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடம். இந்த இடம் உலகிலேயே பாதுகாப்பான இடம். எந்த ஊழியர்களும் அதன் பெட்டகத்திற்கு தனியாக செல்ல முடியாது. பலவித பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி மட்டுமே இந்த இடத்தை அடைய முடியும். இந்த கட்டிடம் கான்கிரீட் கிரானைட்டால் ஆனது மற்றும் எஃகு மூலம் மூடப்பட்டிருக்கும், இது எந்த விதமான தாக்குதலிலும் இருந்து பாதுகாக்கிறது.  

7 /7

ஐஸ் கிராண்ட் ஷிரின்  (Ise Grand Shrine) ஜப்பானில் உள்ளது. இதில் பூசாரிகள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும். வெளியாட்கள் இதனை தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும். இது ஷின்டோ மதத்தின் முக்கியமான தளமாகும். இது சூரியன் மற்றும் பிரபஞ்சத்தின் கடவுளான அமதேராசுவின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டுத் தலத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், மரத்தால் ஆன போதும், அதில் ஒரு ஆணி கூட அதில் பயன்படுத்தப்படவில்லை என்பதும் தான்.  பூஜை செய்யும் இடம், 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக கட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.