காலையில் இருந்து நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள்
தினசரி காலையில் கொஞ்சம் பச்சைப் பயிறை சாப்பிடுவதால், உங்கள் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா தானியங்களைப் போலவே பச்சைப் பயிரிலும் தேவையான ஊட்டச்சத்துகள், தாதுக்கள் எல்லாம் இருக்கின்றன. இதனை ஊற வைத்து, முளைக்கட்டி மற்றும் குழம்பாக வைத்தும் சாப்பிடலாம். காலையில் பச்சைப்பயறு சாப்பிடுவதால் உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முதல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது வரை, இந்த பச்சைப்பயறு பல நோய்களுக்கு நன்மை பயக்கும். தினமும் காலையில் பச்சைப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
பச்சைப்பயறு சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிகம் கிடைக்கும். பச்சைப் பருப்பில் பி1, பி2, பி3 மற்றும் பி5, பி6 வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் உள்ளது, இதைத் தவிர வைட்டமின் கேயும் காணப்படுகிறது.
பச்சைப்பயிரில் நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், கால்சியம் போன்ற தாதுக்கள் கிடைக்கின்றன. குறைந்த கலோரிகள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், உணவு நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் இதில் காணப்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது - பச்சைப்பயறு சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. உடலை வலிமையாக்க தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. பச்சைப்பயறு சாப்பிடுவதன் மூலம், எந்த ஒரு தொற்று நோய் அபாயத்தையும் தவிர்க்கலாம்.
நீரிழிவு நோயின் நன்மை- பச்சைப் பயிரில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை இயல்பாக்குகிறது. வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பச்சைப்பயறு சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் லிப்பிட்டை கட்டுப்படுத்தும்
கண்களுக்கு நன்மை பயக்கும் - பச்சைப்பயலில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது உங்கள் கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கிறது. மற்ற கண் பிரச்சனைகளை குணப்படுத்தும் வைட்டமின்களும் காணப்படுகின்றன.
செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும் - பச்சைப்பயறு நார்ச்சத்து நிறைந்தது. இதை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் மேம்படும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். பச்சைப்பயறு சாப்பிட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.