வெயில் காலத்தில் தினசரி ஒரு பூசணி சாப்பிடால் இவ்வளவு நன்மைகளா?

Water Melon Benefits: கோடைக்காலத்தில் தர்பூசணி ஒரு சாத்தியமான மற்றும் ஆரோக்கிய பழமாக பார்க்கப்படுகிறது. உடலில் தேவையான ஊட்டச்சத்துக்களை தர்பூசணி வழங்குகிறது. 

 

1 /5

நீரேற்றம் தர்பூசணி பழம் அதிக நீரேற்றம் கொண்டுள்ளது.  தர்பூசணியில் உள்ள அதிக நீர் உள்ளடக்கம் உடலில் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.    

2 /5

தோல் ஆரோக்கியம் தர்பூசணியில் உள்ள அதிக நீர்ச்சத்து சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் சி கொலாஜனை உற்பத்தி செய்வதில் உடலுக்கு உதவுகிறது.  

3 /5

வீக்கத்தைக் குறைக்கிறது தர்பூசணியில் காணப்படும் மற்றொரு அமினோ அமிலமான சிட்ருலின், உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை உயர்த்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.  இந்த நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை எளிதாக்குகிறது.  

4 /5

புற்றுநோய்  புற்று நோயைத் தடுக்க உதவும் இரசாயனங்கள் தர்பூசணியில் உள்ளன. இதனால் பெரியவர்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.  

5 /5

இதய ஆரோக்கியம் தர்பூசணி இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் உதவும். வெளியான தகவல்களின் படி, தர்பூசணி இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.