மீனாவை போன்றே இளம் வயதில் கணவனை இழந்த நடிகைகளின் பட்டியல்
நடிகை மீனா, திரையுலகில் கொடிகட்டி பறந்த இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் உடல்நலக்குறைவால் அவர் நேற்று காலமானார்.
நடிகை டிஸ்கோ சாந்தி, இவர் 1996-ல் நடிகர் ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார்.
நடிகை கனகா, கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமான இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த முத்து குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த 15வது நாளே காணாமல்போன முத்துகுமார் என்னவானார் என்ற தகவல் இன்று வரை இல்லை.
நடிகை ரோகிணி, இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு நடிகர் ரகுவரனை திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு ரகுவரன் உயிரிழந்தார்.
நடிகை மெளனிகா, இவருடைய கணவர் பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா. இவர்கள் கடந்த 1998-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு பாலுமகேந்திரா காலமானார்.
நடிகை பானுப்ரியா, 1983-ஆம் ஆண்டு மெல்ல பேசுங்கள் படம் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து, கடந்த 1988ஆம் ஆண்டு ஆதஸ் கவுசல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து ஆதஸ் கவுசல் கடந்த 2008ஆம் ஆண்டு உயிரிழந்தார்.