U19 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் அதிக ரன்களை அடித்த இந்தியர்கள்? 2000 டூ 2022

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணியுடன் மோத நிலையில், இத்துடன் 9ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்நிய வீரர்கள் குறித்து இதில் காணலாம். 

  • Feb 11, 2024, 14:02 PM IST
1 /8

2022 உலகக் கோப்பை: நிஷாந்த் சந்து - 50(50), ஷைக் ரஷீத் - 50 (84). இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.   

2 /8

2020: யஷஸ்வி ஜெய்வால் 121 பந்துகளில் 88 ரன்களை அடித்தார். இருப்பினும், இறுதிப்போட்டியில் வங்கதேச அணியே வெற்றி பெற்றது.  

3 /8

2018: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மன்ஜோட் கல்ரா 101 ரன்களை அடித்து உலகக் கோப்பையையும் வெல்ல காரணமானார்.   

4 /8

2016: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இருப்பினும், சர்ஃபராஸ் கான் 89 பந்துகளில் 51 ரன்களை சேர்த்து வெற்றிக்காக கடுமையாக போராடினார்.   

5 /8

2012: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அப்போதைய கேப்டன் உன்முகுந்த் சந்த் 111 ரன்களை சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார்.   

6 /8

2008: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. தன்மே ஸ்ரீவத்சவா இந்த போட்டியில் அதிகபட்சமாக 46 ரன்களை சேர்த்தார், இந்தியா 159 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா  

7 /8

2006: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெறும் 110 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 71 ரன்களுக்கே ஆல்-அவுட்டாகி கோப்பையை தவறவிட்டது. புஜாரா, ரோஹித் சர்மா, ஜடேஜா என பெரிய பேட்டர்கள் இருந்தும் சுழற்பந்துவீச்சாளரான பியூஷ் சாவ்லா அதிகபட்சமாக 25 ரன்களை சேர்த்தார்.   

8 /8

2000: இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா 179 ரன்களை சேஸ் செய்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. இந்திய அணியில் ரீதிந்தர் சோதி 39 ரன்களை அதிகபட்சமாக சேர்த்தார்.