Weight Loss Tips: அதிக கலோரிகளை எரித்து... சிக்கென்ற உடலை பெற உதவும்... சில யோகாசனங்கள்

Yogasana for Weight Loss:  யோகாசனங்கள் மூலம் கொழுப்பை எரிக்க முடியாது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் சில நிமிட யோகா பயிற்சியிலேயே கணிசமான கலோரிகளை எரிக்கலாம் என்பது தான் உண்மை நிலை.

நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சி எடுத்த போதிலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம். அத்தகைய அனுபவம் உள்ளவர்கள், யோகா பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலன் கொடுக்கும்.

1 /8

உடல் பருமனை குறைக்கும் யோகாசனங்கள் (Yoga For Weight Loss): அதிக கலோரிகளை எரித்து கொழுப்பை எரித்து, விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் சில யோகா பயிற்சிகளை அறிந்து கொள்வதன் மூலம், ஒரே மாதத்தில் உடல் பருமனை குறைத்து சிக்கென்ற உடலை பெறலாம்.   

2 /8

உட்கடாசனம் அல்லது நாற்காலி போஸ்: கிழக்கு நோக்கி நின்று கொண்டு, இரு கால் பாதங்களையும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் ஒரு அடி அகலத்தில் முன்னால் நீட்டவும். மெதுவாக ஒரு நாற்காலியில் அமர்வது போல் மெதுவாக உடலை கீழே கொண்டு வரவும். உங்கள் உடல் எடை முழுவதும் குதிகாலில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். பின்னர் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். 

3 /8

தரைவிரிப்பில் கால்களை அகலமாக வைத்து ஊன்றிக் கொண்டு, பக்கவாட்டில் நீட்டி, சுவாசத்தை உள்ளிழுத்து வைத்துக் கொண்டு பின் மெதுவாக சுவாசத்தை வெளிவிட்டவாறே குனிந்து வலது கையால் இடது காலைத் தொடவும். இப்பொழுது, இடது கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இது தான் திரிகோணாசனம் நிலையாகும். மூச்சை உள்ளிழுக்கும் போது, ​​உங்கள் இரு கைகளையும் பக்கவாட்டில் உயர்த்தி, அவற்றை உங்கள் தோள்களுக்கு இணையாகக் கொண்டு வர வேண்டும்.  

4 /8

யோகா விரிப்பில் குப்புற படுத்து கைகளால் கால்களை இறுக பிடிக்க வேண்டும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் கால்களை இழுத்து தலையையும் கழுத்தையும் மேலே தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை வில்லாக வளைக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போது, ​​உங்கள் மார்பு மற்றும் கால்களை தரையில் இருந்து உயர்த்த வேண்டும்.

5 /8

கும்பகாசனம்: இந்த யோகாசனம் எளிதாகத் தோன்றினாலும், சிறிது சவாலானதும் கூட. உங்கள் கைகள் முழங்கைகள் மற்றும் கால்களை 90 டிகிரி கோணத்தில் வைத்து உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும். குப்புற படுத்துக் கொண்டு புட்டத்தை உயர்த்தி சுவாசத்தை உள்ளிழுத்து கைகளை முழுவதுமாக நிமிர்த்திக் கொள்ளவும். தலை முதல் குதிகால் வரை உடல் ஒரே நேர் கோட்டில் இருத்தல் அவசியம். கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றி கொள்ளவும். சுவாசத்தை உள்ளடக்கித் தலையை உயர்த்தி நேராகப் பார்த்து இந்த நிலையில், சில வினாடிகள் நீடித்து இருக்கவும்.

6 /8

சக்ராசனம் அல்லது சக்கர தோரணை: சக்கர தோரணையில் சக்கரம் போல உங்கள் உடலை வளைத்து செய்யும் இந்த பயிற்சி, உங்கள் பிட்டம், கால்கள், தோள்கள், கைகள் மற்றும் தொடைகளுக்கான சிறந்த பயிற்சி. நீங்கள் 15 வினாடிகள்  இந்த சக்கர நிலையில் நீடித்து இருந்தாலே சுமார் 20 கலோரிகளை எரிக்கலாம்.  

7 /8

சூரிய நமஸ்காரம் : வெறும் 12 சுற்றுகள் சூரிய நமஸ்காரம் செய்வதால் 80-90 கலோரிகளை எரிக்க உதவும். உங்கள் கால்கள், கைகள், தோள்கள், வயிற்று பகுதி என உடல் முழுவதும் யோகா செயலில் ஈடுபடும் போது அதிக கலோரிகள் எரிக்கப்படுவது மட்டுமின்றி உங்கள் முழு உடலுக்கும் ஆன பயிற்சியாகவும் அமைகிறது.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.