மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்து, முடிவுகளும் வெளியாகி உள்ள சூழலில் எம்.பி.களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
மொத்தம் நாடு முழுவதும் 543 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.
மக்களவை உறுப்பினர்கள் மாத சம்பளமாக ரூ.1 லட்சம் பெறுவார்கள். கூடுதலாக, அவர்களின் சம்பளம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அதிகரிக்கும். அடிப்படை ஊதியம் உயராமல் அவர்களின் கொடுப்பனவுகள் (Allowances) உயரும்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம், 2010இன் படி, அடிப்படை ஊதியம் என்பது ரூ.50 ஆயிரமாக நீடிக்கும்.
மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும்பட்சத்தில் உறுப்பினர்களுக்கு தினமும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையாக கொடுக்கப்படும்.
உறுப்பினர்கள் சாலை மார்க்கமாக பயணிக்கும்பட்சத்தில் ஒரு கிலோ மீட்டர் 16 ரூபாய் என்ற ரீதியில் அவர்களுக்கு பயணப்படி வழங்கப்டுகிறது.
தொகுதி சார்ந்த நிதி ஒதுக்கீடாக மாதம் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு அலுவலக செலவாக மாதம் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. .
இதில் பேப்பர், பேனா போன்ற ஸ்டேஷ்னரி செலவுகளுக்கும், தபால் செலவுகளுக்கும் 15 ஆயிரம் இதில் ஒதுக்கப்படும். இந்த கொடுப்பனவை அலுவலக உதவியாளர்களின் ஊதியத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
உறுப்பினர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ சேவையைப் பெற ஒவ்வொரு மாதமும், 500 ரூபாய் பெறுவார்கள்.
கூட்டங்களுக்குச் செல்வது உட்பட தங்கள் தொகுதிகளை பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் செலவுகளை விண்ணப்பித்து அதனை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். உறுப்பினர்கள் தங்களுடைய முழு பதவிக்காலத்திலும் வாடகையில்லா வீட்டு வசதியைப் பெறுவார்கள்