சீனப் புத்தாண்டு இன்று...சந்திர புத்தாண்டு, மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் லூனர் புத்தாண்டை சீனர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
(Photos Credit: AFP)
கொரோனாவின் தாயகமாக நம்பப்படும் சீனாவையே, ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவின் தொடர் பிறழ்வுகள், புத்தாண்டு கொண்டாட்டங்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது.
புத்தாண்டன்று பயணம் மேற்கொள்ள முடியாவிட்டாலும், அதன்பிறகு நாங்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினரை சந்திக்க முடியுமா என்று மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன
குளிர்கால ஒலிம்பிக்கின் காரணமாக, தலைநகரின் குடிமக்கள் வெளியேற வேண்டாம் என்று அதிக அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர், அத்துடன் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட நகரத்திற்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொள்கின்றனர்.
இன்று மக்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வசந்த விழாவைக் கொண்டாட முடியுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன
தொழிலாளர்கள் கணவன், மனைவி, பெற்றோர் அல்லது குழந்தைகளைப் பார்ப்பதற்கான ஒரே வாய்ப்பு இந்த புத்தாண்டு சந்தர்ப்பம் தான்
சீன மொழியில் "வசந்த விழா" என்று அழைக்கப்படும் சீனாவின் மிக முக்கியமான தேசியத் திருவிழா இன்று...
சீனப் புத்தாண்டு சீனா, ஹாங்காங், மக்காவு, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியஸ், மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட சீன மக்கள் கணிசமாக உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கொண்டாடப்படுகிறது.
தொற்றுநோயால், புத்தாண்டுக்கு வீடு திரும்ப இயலாமல் மக்கள் மன வருத்தப்படுகின்றனர்.