இப்போது மழைகாலமாக இருக்கும் நிலையில் இடி மின்னல் அடித்தால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாமா? என பார்க்கலாம்.
இப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் மாலையில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் உங்கள் மின்னணு சாதனங்களைப் பாதுகாப்பது போலவே உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் முக்கியம்.
பலருக்கும் இடி மின்னல் அடிக்கும்போது மின் சாதன பொருட்கள் பயன்படுத்தலாமா? என்ற கேள்வியும் அச்சமும் இருக்கிறது. ஏனென்றால் மழை பெய்யும்போது கடுமையான மின்னல் காரணமாக பல மின்னணு சாதனங்கள் சேதமடைந்துள்ளன.
டி.வி., செட்-ஆஃப் பாக்ஸ், கம்ப்யூட்டர், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என பல சாதனங்கள் இதுபோன்ற இடியுடன் கூடிய மழையின் போது இயக்கப்படுவதால், சேதமடையும் வாய்ப்பு மிக அதிகம்.
அதே சமயம், இடியுடன் கூடிய மழையின் போது மொபைல் போன் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது பலர் தங்கள் தொலைபேசியை கூட பயன்படுத்துவதில்லை. ஆனால் மின்னல் அலைபேசிகளை பாதிக்காது என்பதே உண்மை.
மொபைல் போன்கள் ரேடியோ சிக்னல்கள் மூலம் செயல்படுகின்றன. எனவே, மின்னல் மொபைல் போன்களை பாதிக்காது. எனவே இடியுடன் கூடிய மழையின் போது மொபைல் போன்களை பாதுகாப்பாக இயக்கலாம். மின்னலால் போன் எந்த வித சேதமும் அடையாது.
அதேநேரத்தில் இடியுடன் கூடிய மழையின் போது உங்கள் மொபைலை சார்ஜ் செய்யாதீர்கள். அபப்படி இயக்கினால், மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களைப் போல உங்கள் ஃபோனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால் ஸ்மார்ட்போனில் இருந்து அழைப்புகள் செய்வதோ, நெட் உபயோகிப்பதோ, கேம் விளையாடுவதோ தவறில்லை. இந்த நேரத்தில் நீங்கள் வழக்கம் போல் உங்கள் மொபைலைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், மழைக்காலத்தில் தொலைபேசியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். தொலைபேசியில் அதிக தண்ணீர் வராமல் கவனமாக இருங்கள்.
பல நிறுவனங்கள் தங்கள் சாதனங்களை நீர் எதிர்ப்புத் திறன் கொண்டவையாகச் செய்தாலும், அதிகப்படியான நீர் வெளிப்பாடு பல சாதனங்களை சேதப்படுத்தும்.