காலை அல்லது இரவு? முகத்திற்கு ஃபேஸ் வாஷ் எப்போது பயன்படுத்த வேண்டும்?

Face Wash: ஒரு சிலருக்கு ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது பிடிக்கும், ஒருசிலருக்கு பிடிக்காது. இருப்பினும், காலை அல்லது மாலை முகத்திற்கு எப்போது ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

ஒவ்வொருவரின் தோல் வகை பொறுத்து அதற்கேற்ப ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும். வறண்ட தோல் மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கென தனி தனி ஃபேஸ் வாஷ் உள்ளது.  

2 /6

காலையில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளை மற்றும் அதிகப்படியான எண்ணெய்களை நீக்க உதவும். மேலும் முகத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது.  

3 /6

மறுபுறம், இரவில் தூங்கும் முன்பு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவுது முகத்தில் இருக்கும் தூசி, மேக்கப் போன்றவற்றை நீக்க உதவும். இதன் மூலம் முகப்பரு போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.  

4 /6

அதிக எண்ணெய் பசை கொண்ட சருமம் உள்ளவர்கள் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. இவை எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவத உதவும்.   

5 /6

உங்கள் தோல் வகைகளுக்கு ஏற்ற மென்மையான ஃபேஸ் வாஷை தேர்வு செய்ய வேண்டும். அப்படி பயன்படுத்தவில்லை என்றால் முகத்தில் எரிச்சல், நீரிழப்புக்கு வழிவகுக்கும்.   

6 /6

காலை மற்றும் இரவு என இரண்டு வேலைகளிலும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது சருமத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உகந்த சரும ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.