Jupiter Transit: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மற்றுவதை போலவே நடசத்திரங்களையும் மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் அமர்ந்து மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். தேவகுரு மேஷ ராசியிலிருந்து விலகி மதியம் 12:59 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.
மே மாத குரு பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். வேலை, தொழில், அரசியல் என அனைத்திலும் வெற்றி பெறலாம். செல்வ வளமும் கூடும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், மே மாதம் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு முன்பாக ஏப்ரல் 16ம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். கிருத்திகா நட்சத்திரம் சூரியக் கடவுளால் ஆதிக்கம் செலுத்தும் நடத்திரம். குரு பகவான் சூரியக் கடவுளின் நட்பு கிரகம்.
ஏப்ரலில் கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கும் குரு பகவான், ஜூன் 12 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். மேலும் அக்டோபர் 9ம் தேதி, தேவகுரு வியாழன் வக்ர பெயர்ச்சியாகி, 4 பிப்ரவரி 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார். பின்னர் 2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி, தேவகுரு ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்கு மாறுகிறார்.
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு அருள் மழையை பொழிவார். இந்த காலகட்டத்தில், மேஷ ராசியின் செல்வ வீட்டில் தேவகுரு அமர்ந்திருப்பார். இதனால் வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். இருப்பினும், இவர்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கடக ராசியில் குரு பகவான் உச்சம் பெற்றுள்ளார். இதன் மூலம் கடக ராசிக்காரர்களுக்கு பணவரவு கூடும். கைக்கு வராது என நினைத்த பணத்தை மீட்க முடியும். ஜோதிட ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யலாம். இது கற்பனை செய்ய முடியாத லாபத்தை உருவாக்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும்.
சிம்ம ராசியின் அதிபதி சூரியக் கடவுள். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு விஷ்ணு பகவானின் சிறப்பு அருள் உண்டு. அதே நேரத்தில், ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் போது, குரு பகவானால், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி ஆதாயத்தைப் பெறலாம். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் பெறுவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் தடைபட்ட பணம் கிடைக்கும். புதிய திட்டப்பணிகள் கிடைக்கும். உங்கள் வருமானம் பெருமளவில் உயரக்கூடும்.
குரு பெயர்ச்சியினால் கன்னி ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் தேவகுரு பெயர்ச்சியாகிறார். இதனால் அதிர்ஷ்டத்திற்கு குறைவு இருக்காது. பண விஷயத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. பல பரிமாணங்களில் இருந்து செல்வம் பெற வாய்ப்புகள் உள்ளன. பொன், பொருட்சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.