செம்ம மாஸ் போன்; 20 GB RAM கொண்ட ZTE யின் புதிய ஸ்மார்ட்போன்

ZTE நிறுவனம் 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்குகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதுபற்றிய தகவலை அந்நிறுவன அதிகாரி ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

1 /4

ZTE நிறுவன இயக்குனர்களில் ஒருவரான லு கியன் ஹௌ 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளார். இதில் அதிகபட்சம் 1000 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களை எதிர்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதா லு கியன் ஹௌ தெரிவித்தார்.  

2 /4

சமீப காலங்களில் ASUS மற்றும் Lenova போன்ற நிறுவனங்கள் 18 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், ZTE உருவாக்கும் 20 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டியை மேலும் கடுமையாக்கும் என தெரிகிறது. 

3 /4

அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலும் ZTE ஈடுபட்டு வருகிறது. வரவிருக்கும் நேரத்தில், ZTE இன் ஸ்மார்ட்போனின் சாத்தியமான அம்சங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

4 /4

ZTE இன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ZTE ஆக்சன் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த சீரிஸின் சிறந்த மாடலான ZTE ஆக்சன் 30 அல்ட்ரா 5 ஜி 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளுடன் சீனாவில் சுமார் 62,231 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.