2025ல் வரும் முக்கிய அமாவாசை தேதிகள்... குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

Amavasai dates 2025 | 2025 ஆம் ஆண்டு அமாவாசை எந்தெந்த நாட்களில் எல்லாம் வருகிறது என்ற தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Amavasai dates | 2025ல் ஆண்டு முழுவதும் 12 அமாவாசை நாட்கள் வர உள்ள நிலையில், எந்தெந்த தேதிகளில் அமாவாசை வருகிறது?, முக்கிய அமாவாசை தேதி என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 

1 /8

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை (Amavasai) நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. புராண நூல்களின்படி, சந்திரன் தனது 16 வது கட்டத்தைக் காட்டும்போது அது அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இது கிருஷ்ண பக்ஷத்தின் கடைசி தேதியாக இருக்கும். இந்த நாளில் வானத்தில் சந்திரன் தெரியமாட்டார்.

2 /8

அமாசவாசை நாளில் அரச மரம் மற்றும் முன்னோர்கள் வழிபடு செய்வதை மக்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். முன்னோர்களை வழிபட அமாவாசை நாள் தான் சிறந்தது. இந்த நாளில் முன்னோர்கள் வழிபாடு நடத்தினால் அனைத்து கஷ்டங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

3 /8

இதனால், நம் குடும்பத்துக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைத்து, பெரிய பிரச்சனைகள் எல்லாம் விலகி மகிழ்ச்சியும் நல்ல காலமும் பிறக்கும் என்பது தீர்க்கமான நம்பிக்கை. இந்து நாட்காட்டியின்படி, ஒரு வருடத்தில் மொத்தம் 12 அமாவாசைகள் அதாவது ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை வரும்.

4 /8

இவற்றில் சனி அமாவாசை மற்றும் திங்கட்கிழமை அமாவாசை சிறப்பு வாய்ந்தது. 2025 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, திங்கட்கிழமை அமாவாசை ஒரு முறையும், சனி அமாவாசை இரண்டு முறையும் வருகிறது.

5 /8

2025 ஆம் ஆண்டின் முதல் அமாவாசை ஜனவரி 29 அன்று வர இருக்கிறது. அந்த நாள் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை நாளாகும். அடுத்த அமாவாசை பிப்ரவரி 27 அன்று வருகிறது. அடுத்த அமாவாசை தேதி மார்ச் 29.

6 /8

வைகாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை ஏப்ரல் 27 ஆம் தேதியும், ஆனி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை மே 27 ஆம் தேதியும் வருகிறது. மிக முக்கியமான ஆடிஅமாவாசை ஜூன் 25 அன்று வருகிறது.

7 /8

ஆவணி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை ஜூலை 24 ஆம் தேதியும், புரட்டாசி மாதத்தின் வரும் மிக முக்கியமான மகாயபட்சத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகஸ்ட் 23 ஆம் தேதியும் வருகிறது.

8 /8

அதேபோல், ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை செப்டம்பர் 21 ஆம் தேதியும், கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை தினம் அக்டோபர் 21 ஆம் தேதியும் வருகிறது. மார்கழி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை நவம்பர் 20ஆம் தேதியும், தை மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை டிசம்பர் 19ஆம் தேதியும் வருகிறது.