Actress Looks Like Keerthy Suresh And Tamannaah Bhatia : ஒரு புது நடிகை, பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷின் ஜாடையிலும் தமன்னாவின் ஜாடையிலும் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Actress Looks Like Keerthy Suresh And Tamannaah Bhatia : பொதுவாக, அனைத்து நடிகைகளுக்கும் தனித்தனியான அழகு இருக்கும். ஆனால், யாரையாவது ஒரே மாதிரி இருந்து பார்த்துள்ளீர்களா? அதிலும், இரு நடிகைகளின் முக ஜாடை, ஒரே நடிகைக்கு இருந்து பார்த்துள்ளீர்களா? அப்படி ஒரு நடிகையின் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் 7 பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கூறுவர். அந்த வகையில், இந்த நடிகையும் அந்த 7 பேரில் ஒருவர் போல..என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த நடிகை யார்? அவர் பார்ப்பதற்கு தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல இருக்கிறாரா? இங்கு அது குறித்து பார்ப்போம்.
தென்னிந்திய திரையுலகிற்கு புதிதாக வந்திருக்கும் நடிகை, பாக்கியஸ்ரீ போர்ஸ். தமிழ் படங்களில் இதுவரை நடித்திராத இவரை அதற்குள் தமிழ் ரசிகர்கள் வைரலாக்க ஆரம்பித்து விட்டனர்.
கடந்த ஆண்டு முதல் திரையுலகில் இருக்கும் இவர், இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில்தான் இதுவரை நடித்திருக்கிறார்.
பாலிவுட் நாயகன் கார்த்திக் ஆரியன் உடன் இவர் சேர்ந்து நடித்த சந்து சாம்பியன் திரைப்படம், இந்தியில் வெளியானது. இது இவரது இரண்டாவது படமாகும், முதல் படம், யாரியன் 2.
பாக்கியஸ்ரீ, இதுவரை 3 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதில், சமீபத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் இவர் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடித்ததே மூன்று படம்தான் என்றாலும் அந்த படங்கள் அனைத்திலும் முன்னணி கதாநாயகர்களுடன்தான் ஜோடியாகி இருக்கிறார்.
அவுரங்காபாத்தில் பிறந்த இவர்,மகாராஷ்ட்ராவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரை தேடி இன்னும் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
2024ல் பெரிதாக வைரலான கதாநாயகிகளுள் ஒருவராக இருக்கிறார், பாக்கியஸ்ரீ போர்ஸ். இதையடுத்து இவர் குறித்த இன்னொரு விஷயமும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பாக்கியஸ்ரீ போர்ஸின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இவர் பார்ப்பதற்கு பாதி கீர்த்தி சுரேஷ் போலவும் மீதி தமன்னா போலவும் இருப்பதாக கூறி வருகின்றனர்.