உடல் எடை குறையணுமா... காலி வயிற்றில் ‘இவற்றை’ சாப்பிடக் கூடாது

உடல் பருமன் இன்று பெரும்பாலானோர்  எதிர்கொள்ளும் பிரச்சனை. உடல் எடையை குறைக்க பல வழிகளை முயற்சி செய்கிறோம். முதல் கட்டமாக, உணவில் மாற்றங்களை செய்வதோடு, சரியான ஆரோக்கியத்திற்கு சரியான உணவு தேர்வு அவசியம். உடல் எடையை குறைக்க நினைத்தால், சில உணவுகளை எந்த காரணத்திற்காகவும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத சில உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

காலை வேளையில் குளிர்பானங்கள் அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது மட்டுமின்றி உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். குளிர்பானங்களை வெறும் வயிற்றில் குடிப்பது அமிலத்தன்மை, இரைப்பை பிரச்சனைகள், குமட்டல் போன்றவையும் ஏற்படுத்தும்.  

2 /6

காலையில் காரமான உணவைத் தவிர்க்கவும், அது அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அமிலத்தன்மைக்கும் வழிவகுக்கிறது.

3 /6

காலையில் வெதுவெதுப்பான தண்ணீர், லெமன் டீ அல்லது இஞ்சி டீ குடிக்கவும். இவ்வாறு செய்வதால் உங்கள் மெட்டபாலிசம் அதிகரிக்கும். காலையில் குளிர்ந்த காபி அல்லது குளிர்ந்த தேநீர் போன்ற குளிர் பானங்களை குடிப்பது உங்கள் செரிமானத்தை பாதிக்கும்.

4 /6

காய்கறி சாலட் சாப்பிடுவது கண்டிப்பாக உடல் எடையை குறைக்க உதவும். ஆனால்  இவற்றை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. பச்சைக் காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வயிற்று வலி, அமிலத்தன்மை ஏற்படலாம்.

5 /6

சிட்ரஸ் பழங்களை காலையில் சாப்பிட வேண்டாம் வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் வயிற்றில் அமிலம் உருவாகும். இந்த பழங்கள் நார்ச்சத்து நிறைந்தவை, ஆனால் அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

6 /6

உலர் பழங்கள் ஊறவைத்த கொட்டைகள் மற்றும் வெதுவெதுப்பான நீருடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். கொஞ்சம் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வழக்கமான உணவு மற்றும் பழக்கத்தை தொடரலாம். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஆச்சரியமாக இருக்கும்