2024ல் வெளிவர இருக்கும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள்

2024-ம் ஆண்டின் பாக்கி இருக்கும் ஏழு மாதங்களில் வெளியாக உள்ள தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் வெளியாகும் தேதிகள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தென்னிந்திய திரைப்படத்துறை தற்போது கொடி கட்டி பறந்து வருகிறது. அ ந்த் வகையில், இந்த 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித்குமார், விஜய், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாக உள்ளது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

1 /14

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

2 /14

நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ராயன். இந்தப்படத்தில் காளிதாஸ், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

3 /14

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ப்ரீயட் திரைப்படம், தங்கலான். படம் அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகயுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

4 /14

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். இதில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகயுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

5 /14

பிரெம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தியோடு, அரவிந்த்சாமி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகயுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

6 /14

நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்துக்கு ‘Bloody Beggar’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  

7 /14

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் தனது 68வது பட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்திற்கு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகயுள்ளது.

8 /14

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "அமரன்." இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 /14

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் வேட்டையன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

10 /14

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் 2 திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகயுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

11 /14

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த கங்குவார திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  

12 /14

நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படமான விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகயுள்ளது.

13 /14

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் தக் லைஃப் படம் நவம்பர் / டிசம்பர் மாதம் வெளியாகலாம்.

14 /14

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தி ரூல் படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகயுள்ளது.