ஒரே மாசத்தில் இத்தனை கிரகப் பெயர்ச்சிகளா? ஐப்பசியில் அனைவரையும் டென்ஷனாக்கும் கிரகங்கள்!

Planet Transit In Aippasi : ஐப்பசி மாதத்தை உருவாக்க சூரியன் இன்று கன்னியில் இருந்து துலாமுக்கு பெயர்ந்தார். இதனைத் தவிர ஐப்பசி மாதத்தில் பல கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன....

நவகிரகங்களில் அனைத்து கிரகங்களும் இயங்கிக் கொண்டே இருக்கும் நிலையில் அடிக்கடி கிரக சஞ்சாரங்கள் நிகழ்ந்தாலும், சனி மட்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர ஒன்றரை வருடம் எடுத்துக் கொள்வார்... ஐப்பசியில் சனி உட்பட பல கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன...

1 /9

குரோதி ஆண்டு ஐப்பசி மாத கிரகப் பெயர்ச்சிகளில் சூரியன் பெயர்ச்சி முதன்மையானது, அது இன்று நடைபெற்றது. கன்னி சூரியன், இன்று முதல் துலா சூரியனாக மாறினார்

2 /9

மாதந்தோறும் சூரியன் மாறுவதன் அடிப்படையிலேயே தமிழ் மாத பிறப்பு அமைகிறது. அந்த வகையில் எந்த தமிழ் மாதமாக இருந்தாலும், அதில் சூரியன் பெயர்ச்சி தான் முதலாவதாக இருக்கும்.

3 /9

இன்று பெளர்ணமி, சந்திரன் முழுநிலவாக வானில் பிரகாசிக்கிறார். ஐப்பசி மாதமே பெளர்ணமி நாளில் துவங்குவது விசேஷம். ஆனால், இந்த ஐப்பசியில் இரு பெளர்ணமிகள் வருவதால் விஷ மாதம் என்று சொல்வார்கள். 

4 /9

அக்டோபர் 20ம் தேதியன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்கு மாறுகிறார்

5 /9

அக்டோபர் 22ம் தேதியன்று, புதன் துலாம் ராசியில் உதயமாகிறார்

6 /9

அக்டோபர் 29ம் நாளன்று புதன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

7 /9

நவம்பர் ஏழாம் நாளன்று சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசியில் நடைபெறவிருக்கிறது

8 /9

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், நவம்பர் 15ம் தேதியன்று வக்ர நிவர்த்தி பெறுகிறார்

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது