Nissan X-Trail STD latest updates : இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் எக்ஸ்-டிரைல் (Nissan X-Trail) கார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார் ஆகும். இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது...
நிஸான் டிரையல் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், முன்பதிவு செய்தவர்களுக்கு கார் டெலிவரி கொடுப்பது தொடங்கிவிட்டது... நிஸானின் புதிய வரவின் விலை என்ன தெரியுமா?
நிஸான் கார் நிறுவனத்தின் இரண்டாவது கார் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கியது. இதுவரை நிஸான், மேக்னைட் காரை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துவந்த நிலையில், நிறுவனத்தின் 2வது காராக எக்ஸ்-டிரைல் என்கிற மிட்-சைஸ் எஸ்யூவி கார் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கும் கார் என்பதால், இதன் விலை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது காரின் தொடக்க விலை 49.92 லட்ச ரூபாய் ஆகும்
புதிய நிஸான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட தினத்திலேயே முன்பதிவும் தொடங்கியது. தற்போது, முன்பதிவு செய்தவர்களுக்கு கார்கள் விநியோகம் தொடங்கிவிட்டது
நிஸான் எக்ஸ்-டிரைல் காரில் 1.5 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 12 வோல்ட் மோட்டார் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதுவொரு மைல்ட்-ஹைப்ரீட் கார் ஆகும்
1498 cc இன்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎச்பி மற்றும் 300 என்.எம் டார்க் வரையிலான ஆற்றலை காருக்கு கொடுக்கிறது
ஈக்கோ, ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான டிரைவிங் மோட்கள் நிஸான் எக்ஸ் டிரையலில் உள்ளது. காரின் மைலேஜை அதிகரிக்கும் பல அம்சங்கள் இந்தக் காரில் உள்ளன.
ஒரேயொரு வேரியண்டில் கிடைக்கும் நிசான் எக்ஸ் டிரெயில், 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ஆகும். இதன் விலை ரூ. 49.92 லட்சம் தான்
X-Trail 7 ஏர்பேக்குகளுடன் வருகிறது. நிசான் எக்ஸ் டிரெயில் 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 3 வண்ணங்களில் கிடைக்கிறது