ஐபிஎல்: பாகிஸ்தான் பவுலரின் சாதனை

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் இடம்பெற்றுள்ளார்.

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும் ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சாளர்களின் சாதனையை பார்க்கலாம்.

1 /5

ஐபிஎல் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அல்சாரி ஜோசப். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 2019 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

2 /5

2வது இடத்தில் இருப்பவர் சோகைல் தன்வீர். பாகிஸ்தான் வீரரான இவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 17 டாட் பால்களை வீசி அசத்தினார். 

3 /5

ஐபிஎல் போட்டியில் டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இருக்கும் ஸ்பின்னரான ஆடம் ஜாம்பா, 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.   

4 /5

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே 3.1 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சில் இதுவும் ஒன்று.   

5 /5

மும்பை வீரர் ஜஸ்பிரித் பும்ரா நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் வரிசையில் இடம்பிடித்துள்ளார்.