இது 5G யுகம்! தேவையான அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் மத்திய அரசு: முழு விவரம் உள்ளே

இது 5G காலம்!! எதிர்காலத்திற்கான இணைய தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு மெகா திட்டத்தை மோடி அரசு தயாரித்துள்ளது. இந்தியாவின் தேசிய இணைய பரிவர்த்தனை அமைப்பு (NIXI) மூன்று தனித்துவமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது

 இவை எதிர்காலத்தின் மிக சக்திவாய்ந்த தகவல் தொடர்பு அமைப்பான IPv6 பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும். இந்த அறிமுகத்தின் மூலம், NIXI, DOT மற்றும் MeitY உடன் இணைந்து நாட்டில்  IPv6 விழிப்புணர்வு மற்றும் அங்கீகாரத்திற்கு தேவையான பங்களிப்பை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

1 /4

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பிரகாஷ் சாஹ்னி, இதன் மூலம், நாட்டில் 5G தொழில்நுட்ப துவக்கத்திற்கு ஆதரவும் உதவியும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சாதனங்களை இணையத்துடன் இணைக்க முடியும். கடந்த ஆண்டு, அனைத்து அரசு நிறுவனங்களையும் ஐபிவி 6 க்கு மாற்ற DoT உத்தரவிட்டது.

2 /4

NIXI IP குருவை அறிமுகம் செய்துள்ளது. இது, IPv6 ஐ ஏற்றுக்கொள்வதில் இந்திய நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவியை வழங்கும். இணைய வளங்களை சிறப்பாக நிர்வகிக்க வழிவகுக்கும் IPv6 போன்ற தொழில்நுட்பங்களைப் பற்றி தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும், தொழில்நுட்பத்துடன் தொடர்பில்லாதவர்களுக்கும் அறிவுறுத்துவதற்காக இந்தியாவில் NIXI அகாடமி உருவாக்கப்படும் என்றும் NIXI  அறிவித்தது.  

3 /4

இந்தியாவிலும் உலகெங்கிலும் ஐபிவி 6 ஐ ஏற்றுக்கொள்ளும் விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்க NIXI-IP-INDEX போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. MEITY செயலாளர் அஜய் பிரகாஷ் கூறுகையில், "ஐபிவி 6 ஒரு முக்கியமான கருவியாகும். இது நாட்டில் வளர்ந்து வரும் ஐபி தேவையை பூர்த்தி செய்ய உதவும். ஐபிவி 6 ஐ ஏற்றுக்கொள்வதில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது." என்று கூறினார்.

4 /4

IPV6 - க்காக ஒரு நிபுணர் குழுவை நிக்ஸி உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த குழு அரசு மற்றும் பிற அமைப்புகளின் நிபுணர்களைக் கொண்டிருக்கும். எந்தவொரு கட்டணமும் இன்றி IPV6 -க்கு மாற்றும் வகையை குழு பங்குதாரர்களுக்கு எடுத்துரைக்கும். இப்படிப்பட்ட பல முயற்சிகள் மூலம் 5G தொழிநுட்பத்தை இந்தியாவில் லாவகமாகவும் வேகமாகவும் அறிமுகம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர மோடி அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.