Whatsapp-ல் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த 5 அட்டகாச அம்சங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா

மக்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்ட Whatsapp தொடர்ந்து பல புதுமைகளை செய்து வருகிறது. பொதுவான பயனர்களின் chat-களில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  சமீபத்தில், வாட்ஸ்அப் பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

இப்போது Whatsapp மூலமும் ஷாப்பிங் செய்ய முடியும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். வாட்ஸ்அப் சமீபத்தில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியது. வேறு எந்தெந்த அம்சங்களை வாட்ஸாப் சமீபத்தில் பயன்ர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது எப்தை பார்க்கலாம்

1 /5

சமீபத்தில், வாட்ஸ்அப் ஒரு புதிய ‘டிஸ்அப்பியரிங் மெசேஜஸ்’ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், 7 நாட்களில் தானாக மறைந்து போகும் மெசேஜை ஒருவருக்கு நீங்கள் அனுப்ப முடியும். இந்த அம்சம் தனிப்பட்ட மற்றும் குழு செய்திகளில் செயல்படுகிறது. ஆனால் குழுக்களில் அட்மின் மட்டுமே இந்த அம்சத்தை இயக்க முடியும்.

2 /5

வாட்ஸ்அப் சமீபத்தில் கட்டண அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நீங்கள் UPI மூலம் வாட்ஸ்அப்பிலும் பணம் செலுத்தலாம். உங்கள் சேட்டிங்கில் கட்டண ஆப்ஷனும் வந்துள்ளது. சேட் செய்துகொண்டே இப்போது நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.

3 /5

இப்போது வாட்ஸ்அப் மூலமும் ஷாப்பிங் செய்ய முடியும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். வாட்ஸ்அப் சமீபத்தில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது இதன் மூலம் நீங்கள் உங்கள் அருகிலுள்ள பகுதியில் உள்ள ஷாப்பிங் விற்பனை நிலையங்களையும் வணிகத்தையும் தேட முடியும். அவர்களுடன் எளிதாக ஷாப்பிங் செய்யலாம்.

4 /5

ஒரு குழு அல்லது ஒரு நபரின் உரையாடலால் நீங்கள் கலக்கமடைந்தால், இப்போது நீங்கள் அவர்களை முடக்கலாம். அதாவது, நீங்கள் ஒருவரைத் தடுக்கவோ அல்லது ஒரு குழுவை விட்டு வெளியேறவோ தேவையில்லை. நீங்கள் அந்த செய்திகளை மட்டும் முடக்கி விடலாம்.

5 /5

வாட்ஸ்அப்பில் தினமும் நூற்றுக்கணக்கான செய்திகள் பெறப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் எல்லா வீடியோக்களையும் புகைப்படங்களையும் நீக்குவது கடினம். ஆனால் இப்போது நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது நீங்கள் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தின் உதவியுடன் மொத்த செய்திகளையும் ஒரே நேரத்தில் நீக்கலாம்.