நல்ல நட்பிற்கு வயது என்பதும் தடை இல்லை, காசும் பணமும் முக்கியம் இல்லை. கருத்து வேறுபாடு வந்தாலும், செல்வாக்கு வந்தாலும் போனாலும் கவலை இல்லை. என்றும் மாறாத குணம், உரிமையுடன் கூடிய அன்பு... இதோ ஒரே தொழிலில் இருந்தாலும், அன்புடன் நட்பாய் பழகும் திரைப் பிரபலங்கள்... நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் நட்பு ஒரு விதம் என்றால், தல அஜித், தளபதி விஜயின் நட்பு மாஸ்!!!
திரையுலகின் இரு உச்சங்களின் இந்த நட்பு ரசிகர்களின் ஆவலைத் தூண்டுவது...தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். அவரது பிறந்தநாளின்போது விஜய் ரசிகர்கள் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டினார்கள்... இது தளபதி-தல நட்புக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது...
நண்பர்கள் என்றாலே நினைவுக்கு வருவது திரைப்படம் மட்டுமல்ல...இந்த மூன்று நண்பர்களும் தான்...
நீண்ட கால நட்பின் உதாரணமான நண்பர்கள்.. ரஜினி-கமல் நட்பு அனைத்தையும் தாண்டியது....
இது பம்மும் நட்பல்ல, பம்மல் கே சம்பந்தம் நட்பு..அப்பா என்ன நட்பு என்று வியக்க வைத்த அப்பாஸ்-கமல் நட்பு....
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நட்பு ஒருவர், இருவருடன் அல்ல... பார்ப்பவர் அனைவரிடமும் நட்புக் கொண்ட நட்புச் செம்மல் செவாலியே...
நண்பேண்டா என்ற வசனத்தை பிரபலமாக்கி நட்பை உதயமாக்கிய உதயநிதி-சந்தானம் நட்பு வேற லெவல்!!!
நவீன நட்புக்கு உதாரணமான நட்பு...28 ஆண்டுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிக்காக பரிசுத்தொகையை சமமாக பங்கிட்டு கொடுத்த நவீன நட்பு...