ஊடக அறிக்கையின்படி, பல மோசடி அழைப்புகள் குறித்த பல வழக்குகள் சமீபத்தில் பதிவாகியுள்ளன.
கால் செய்பவர்கள் முதலில் மக்களிடம் ஒரு பிராடெக்டைப் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்வதாகக் கூறுகிறார்கள். பேசுபவரின் சுய விவரங்களைப் பற்றி கேட்கிறார்கள்.
ஒரு கணக்கெடுப்பில் கலந்துகொண்டால் போதும், பணம் கொட்டும் என்று உறுதியளிக்கும் அழைப்புகள் உங்களுக்கும் வருகின்றனவா? இவை மோசடி அழைப்புகளாக இருக்கலாம், ஜாக்கிரதை!! ஊடக அறிக்கையின்படி, இப்படிப்பட்ட பல மோசடி அழைப்புகள் குறித்த பல வழக்குகள் சமீபத்தில் பதிவாகியுள்ளன.
கால் செய்பவர்கள் முதலில் மக்களிடம் ஒரு பிராடெக்டைப் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்வதாகக் கூறுகிறார்கள். பேசுபவரின் சுய விவரங்களைப் பற்றி கேட்கிறார்கள். 5 நிமிடம் அவர்களுடன் பேசினால் அதற்கு ஈடாக வாலெட்டில் 50 ரூபாய் கொடுக்கப்படுமென கூறுகிறார்கள். இதைக் கேட்டு மக்கள் ஏமாந்து விடுகிறார்கள். பேச்சு முடிந்ததும், சரிபார்ப்புக்காக ஒரு ஆவணத்தை அனுப்புமாறு மக்கள் கேட்கப்படுகிறார்கள்.
அவர்கள் அனுப்பும் இணைப்பு மூலம் வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. இது ஒரு ரேண்டம் கால் என்றும் யார் வேண்டுமானாலும் இதில் மாட்டிக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏமாற்றுபவர்கள் UPI மூலம் 50 ரூபாய் அனுப்புவதாகக் கூறுகிறார்கள். இணைப்பில், விவரங்களை தானே உள்ளிடுமாறு நபர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவர் இணைப்பில் விவரங்களை நிரப்பும்போது, அவரது வாலெட்டுடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது.
எந்தவொரு சர்வே காலிலும் பணம் கிடைப்பதில்லை. கணக்கெடுப்புக்கு பதிலாக பணம் கொடுப்பது பற்றி யாராவது பேசினால், எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் அத்தகைய அழைப்பைப் பெற்று உங்களிடம் ஆவணங்கள் கேட்கப்பட்டால், அவற்றை நீங்கள் கொடுக்க வேண்டாம். நீங்கள் அளிக்கும் ஆவணங்கள் மற்றவர்கள் உங்களை ஏமாற்ற பயன்படுத்தப் படலாம். இதுபோன்ற அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது கண்டிப்பாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கொடுக்க வேண்டாம்.
இப்படிப்பட்ட போலி அழைப்பு செய்பவர்களிடம் நீங்கம் கேள்வி கேட்கத் துவங்கினால், அவர்கள் காலை கட் செய்து விடுவார்கள். காலின் போதோ அல்லது அதற்கு பின்னரோ, உங்களுக்கு ஏதாவது லிங்க் அனுப்பப்பட்டால், அதைக் கிளிக் செய்ய வேண்டாம். ஃபோனில் அழைக்கும் நபர், அனுப்பப்பட்ட இணைப்பில் உங்கள் அல்லது கணக்கு விவரங்களை உள்ளிடச் சொன்னால், எந்த விவரங்களையும் கொடுக்க வேண்டாம். தெரியாமல் இணைப்பை நீங்கள் கிளிக் செய்து, அப்படி கிளிக் செய்யும்போது ஏதேனும் செயலி (App) திடீரென நிறுவப்பட்டால், உடனடியாக உங்கள் ஃபோனை ஃபார்மேட் செய்யவும்.