சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு COVID கால Safety Tips!!

COVID-19 தொற்றுநோய் இந்தியாவைத் தொடர்ந்து பாடாய் படுத்துகிறது. இருப்பினும் லாக்டௌன் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில், நோய்த்தொற்று குறித்த பயம் காரணமாக நோயாளிகள் சிக்கலான மற்றும் சில குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளை பிறகு செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதனால் ஏராளமான உயிர்கள் ஆபத்தில் உள்ளன.

COVID-19 தொற்றுநோய் இந்தியாவைத் தொடர்ந்து பாடாய் படுத்துகிறது. இருப்பினும் லாக்டௌன் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில், நோய்த்தொற்று குறித்த பயம் காரணமாக நோயாளிகள் சிக்கலான மற்றும் சில குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளை பிறகு செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதனால் ஏராளமான உயிர்கள் ஆபத்தில் உள்ளன.

சுகாதார முன்னணி வீரர்கள், தொற்றுநோயை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதன் காரணமாக மருத்துவமனைகளால் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது. OPD முதல் அனைத்து விதமான மருத்துவமனை சேவைகளும் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. எனினும், மருத்துவமனைக்குச் செல்வது பாதுகாப்பானதா இல்லையா என்று பல நோயாளிகள் இன்னும் அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கான சில உதவிக்குறிப்புகள் இதோ. 

1 /6

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் தனி மனித இடைவெளி இருப்பது மிக முக்கியம் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். சிகிச்சையை தாமதப்படுத்துவது சிக்கலை தீவிரப்படுத்தலாம். ஆகையால், மருத்துவ அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுங்கள். தேவைப்படும்போது உங்கள் மருத்துவரைச் சந்திக்கவும். உங்கள் வீட்டு வாசல் முதல் மருத்துவமனை வரை நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சில உதவிக்குறிப்புகளை காணலாம். Photo: PTI

2 /6

வீட்டை விட்டு கிளம்பும் முன், உங்கள் மருத்துவரிடம் அவரை சந்திப்பதற்கான நேரத்தை முன்பதிவு செய்துகொள்ளுங்கள். வரிசையில் நிற்பதைத் தவிர்க்க அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சந்திப்புகள் ஆன்லைனில் அல்லது தொலைபேசியில் முன்பதிவு செய்யப்பட வேண்டுமா என்று தெரிந்துகொள்ள மருத்துவமனையை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். முகக்கவசம் அணிவது, ஆல்கஹால் சார்ந்த சானிட்டைசர், கையுறைகள் மற்றும் ஈரமான துடைப்பான்களை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். உங்கள் தண்ணீர் பாட்டிலை வீட்டிலிருந்து எடுத்துச் செல்வது நல்லது. Photo: PTI

3 /6

மருத்துவமனைக்கான உங்கள் பயணத்திற்கு, உங்கள் சொந்த வாகனத்தில் செல்வது நல்லது. நீங்கள் பொது போக்குவரத்தை உபயோகிக்க விரும்பினால், உங்களுடன் வரும் நபருடன் ஒரு வண்டி / ஆட்டோ ரிக்ஷாவை முன்பதிவு செய்வது நல்லது. அப்படி பயணிக்கும் போது அடிக்கடி, உங்கள் கைகளை சுத்தப்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். வெளியில் இருக்கும்போது அனைத்து நேரங்களிலும் உங்கள் முகம், கண்கள் மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும். Photo: PTI

4 /6

உங்கள் போக்குவரத்துக்கு பணம் செலுத்த, பணமில்லா முறையைப் பயன்படுத்துங்கள். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் காகிதப் பணத்தினால் எற்படக்கூடும் அபாயத்தைக் குறைக்கும். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் குறைந்தது இரண்டு அடி இடைவெளியை உறுதி செய்வதுதான். மருத்துவமனைகளில் தொற்றுகளுக்கான தனிப்பட்ட வார்டுகள் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ள அதிக வாய்ப்பு அங்கு இருக்கக்கூடும். ஆகையால் சமூக இடைவெளியையும் பாதுகாப்பையும் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் மருத்துவரை சந்திப்பதற்கு முன்பும் பின்பும் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும். மருத்துவமனையிலும் பணமில்லா கட்டணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்துங்கள். Photo: PTI

5 /6

மருத்துவமனைகள் அபரிமிதமான துப்புரவு நடைமுறைகளை கடைபிடித்தாலும், ஊழியர்கள் பரிந்துரைக்கும் நெறிமுறைகளுக்கு கவனம் செலுத்துங்கள். மருத்துவருடனான உங்கள் நேரம் வீணாவதைத் தவிர்க்க, தேவையான அனைத்து சுகாதார ஆவணங்களையும் அறிக்கைகளையும் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் ஆலோசகருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும், நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளையும் நீங்கள் எழுதிக் கொள்ளலாம். துல்லியமான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக உங்கள் மருத்துவ வரலாறு அல்லது நிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். Photo: PTI

6 /6

வால்வுகளுடன் முகக்கவசம் அணிய வேண்டாம். இவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை. அதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட அல்லது கடையில் வாங்கிய மூன்று அடுக்குகள் கொண்ட முகக்கவசங்களைத் தேர்வு செய்யலாம். Photo: PTI