IAF Day 2020 இந்திய விமானப்படையின் தூண்கள்: Rafale, Sukhoi-30 MKI, Apache, Tejas, Gajraj, in pics

1 /11

SU-30MKI “Flanker”: அனைத்து வானிலையிலும் பயன்படுத்தக்கூடியது இந்த  Su-30MKI விமானம். இந்தியாவின் சுப்பீரியர் விமானம் இது.

2 /11

Mi-35: இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டரான Mi-35, எட்டு வீரர்கள் பயணிக்கும் திறன் கொண்டது.  

3 /11

C-17 “Globemaster”:  ராணுவ-போக்குவரத்து விமானமான இது, பகல் மற்றும் இரவு என எந்த வேளையிலும் கனரக பொருட்கள், உபகரணங்கள் மற்றும் துருப்புக்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

4 /11

C-130J “Super Hercules”:  நான்கு எஞ்சின் கொண்ட ராணுவ சரக்கு விமானம் C-130J. சிறப்பு நடவடிக்கைகள், HADR நடவடிக்கைகளில் இது ஈடுபடுத்தப்படும்.

5 /11

Rafale: ரஃபேல் போர் விமானங்கள் ஏர் சுப்பீரியாரிட்டி வகையை சேர்ந்தவை. வானிலிருந்து, வான் இலக்குகள் மற்றும் தரையில் இருக்கும் இலக்குகளையும் ரஃபேல் விமானம் தாக்கும் சக்தி படைத்தது.

6 /11

AH-64E Apache: இரட்டை-டர்போ ஷாஃப்ட் தாக்குதல் ஹெலிகாப்டர் அப்பாச்சி.  

7 /11

LCA “Tejas”: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர் சோனிக் தேஜஸ் விமானம் ஒற்றை எஞ்சின் கொண்டது.  

8 /11

Mi-17 V5: Mi-17 V5 நடுத்தர அளவிலான தளவாடங்களை கொண்டு செல்லும் ஹெலிகாப்டர் ஆகும், இதில் அதிநவீன ஊடுருவல் உபகரணங்கள் மற்றும் நவீன ஏவியோனிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது துருப்புக்கள் மற்றும் ஆயுதப் போக்குவரத்து, தீயணைப்பு பணிகள், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.

9 /11

இந்திய விமானப்படை தினம் அக்டோபர் எட்டாம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. அன்று, போர்விமானங்கல் தங்கள் திறனைக் காட்டும். Rafale, Su-30MKI, Apache, Tejas, `Gajraj` என பலவகையான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் சாகசங்களை காட்டும்.   ரஃபேல் விமானம் பலவிதமான சக்திவாய்ந்த ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதில் ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளரான MBDA நிறுவனத்தின் கண்ணுக்கு புலப்படாத தூரம் வரை சென்று தாக்க வல்ல ஏவுகணை, அனைத்து வகை வானிலையில் இயங்கக்கூடிய தொலை தூரம் வரை சென்று எந்த இலக்கையும் தாக்கக் கூடிய MICA ஏவுகணை  ஆகியவை அடங்கும்.

10 /11

கஜ்ராஜ்: ஐ.எல் -76 “கஜ்ராஜ்” (IL-76 “Gajraj”)  நான்கு எஞ்சின்கள் கொண்ட, பல்நோக்கு, டர்போபான் விமானம் ஆகும். இது ராணுவத்தில் போக்குவரத்துக்கு பயன்படும் விமானம் ஆகும். இந்த விமானம் தொலைதூர பகுதிகளுக்கு கனரக இயந்திரங்களை கொண்டு செல்லும் திறன் படைத்தது. டாங்கிகள், பீரங்கிகள் ஆகியவற்றைக் கொண்டு செல்லலாம் மற்றும் #HADR செயல்பாடுகளுக்கும் கஜ்ராஜ் பயன்படுத்தப்படுகிறது.

11 /11

ருத்ரா: ஏ.எல்.எச் ருத்ரா (ALH Rudr) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் ஆகும், இது உளவு, தளவாடங்களை கொண்டு செல்வது, பீரங்கிகளை தாக்குவது, என பலதரப்பட்ட பணிகளை செய்யக்கூடியது. தாக்குதல் நடத்தக்கூடிய ருத்ரா ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையின் பெருமையின் ஓர் அங்கம் என்றால் அது மிகையாகாது.