TV வாங்கணுமா? Rs 50000 வரையிலான அட்டகாசமான தள்ளுபடிகளை அள்ளித் தருகிறது Samsung

பண்டிகை காலங்களில் நீங்கள் பிரீமியம் டிவி வாங்க நினைத்தால், இந்த மாதம் உங்களுக்கு அதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் தனது டிவியில் 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்க உள்ளது. இந்த தள்ளுபடி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் விற்பனையில் கிடைக்கும். 

1 /5

அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்களில் சாம்சங் தனது பிரீமியம் டிவி வரம்பில் 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த சலுகையில், சாம்சங்கின் தி ஷெரிப் போன்ற தொலைக்காட்சிகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு அதிக தள்ளுபடிகள் கிடைக்கக்கூடும். (Photo Courtesy: Samsung Official Site)

2 /5

சாம்சங் தனது தி ஃபிரேம் டிவி மற்றும் தி ஷெரிப் டிவியில் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்குவதாக கூறியுள்ளது. சாம்சங்கின் தி ஃப்ரேம் நாட்டின் சிறந்த lifestyle தொலைக்காட்சி பெட்டிகளில் ஒன்றாகும். (Photo Courtesy: Samsung Official Site)

3 /5

சாம்சங்கின் தி ஃப்ரேம் மாடல் டிவியின் விலை 75 ஆயிரம் முதல் 1.40 லட்சம் ரூபாய் வரை ஆகும். இதேபோல், தி ஷெரீப்பின் விலை 84 ஆயிரம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை ஆகும். (Photo Courtesy: Samsung Official Site)

4 /5

நீங்கள் சாம்சங்கின் LED மற்றும் பிற டிவி-க்களை வாங்க விரும்பினால், நிறுவனம் தன் சார்பிலும் அதிக தள்ளுபடிகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் நேராக சாம்சங் இந்தியாவின் வலைத்தளத்திலிருந்து டிவி-க்களை வாங்கலாம். இதில் சிறந்த கேஷ்பேக் சலுகைகளும் உள்ளன. (Photo Courtesy: Samsung Official Site)

5 /5

சாம்சங் டிவியில் மாணவர்களுக்கு கூடுதல் நன்மைகளும் சலுகைகளும் கிடைக்கின்றன. இது தவிர, no cost EMI, கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி ஆகிய சலுகைகளும் கிடைக்கும். (Photo Courtesy: Samsung Official Site)